ரேபிட் டெஸ்ட் கருவிகளை திரும்பி அனுப்பும் இங்கிலாந்து!

22 April 2020 அரசியல்
rapidkittest.jpg

ரேபிட் டெஸ்ட் கருவிகள் சொதப்பியதன் காரணமாக, மீண்டும் அதனை சீனாவிற்கே அனுப்ப இங்கிலாந்து அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

உலகம் முழுவதும், சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸானது வேகமாகப் பரவி வருகின்றது. இதனைக் கண்டறியும் கருவிகளை, சீனாவின் பயோசென்சார் நிறுவனம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் தயாரித்து உலகம் முழுவதும் விற்று வருகின்றன. இதனை இந்தியா உட்பட பல நாடுகள் வாங்கி, பயன்படுத்தி வருகின்றன.

இந்தியாவில் இருந்து வாங்கப்பட்ட கருவிகள், அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. தென் கொரியாவில் உள்ள தனியார் நிறுவனத்திடம் இருந்து, ஐந்து லட்சம் ரேபிட் கருவிகளை வாங்க, தமிழக அரசு முடிவு செய்து இருந்தது. இந்நிலையில், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற சோதனைகளில், 90% அதிகமாக தவறான முடிவுகளே இந்த ரேபிட் டெஸ்ட் கருவியின் மூலம் கிடைத்தன.

இதனால், இதனைப் பயன்படுத்த வேண்டாம் என, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் எச்சரித்தது. அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த கருவியினை யாரும் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டது. இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு தற்பொழுது இதனைப் பயன்படுத்துவதை நிறுத்தி உள்ளது.

இதே போல், இங்கிலாந்திலும் இந்தக் கருவியானது, தொடர்ந்து தவறான முடிவுகளையே காட்டியதால், அந்த கருவிகளை மீண்டும் சீன நிறுவனங்களிடமே வழங்க, இங்கிலாந்து அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

HOT NEWS