சீனாவில் உள்ள பிஸ்-4 ஆய்வகத்தில் இருந்து தான், இந்த கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்ததற்கான ஏராளமான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது என, அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு நாளும், அமெரிக்காவில் பரவி வருகின்ற கொரோனா வைரஸ் தொற்று குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சுகாதாரத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர், செய்தியாளர்களைச் சந்தித்து பேசி வருகின்றனர். நேற்று, அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மைக் பாம்பியோ பேசினார்.
அவர் பேசுகையில், சீனாவில் இருந்து தான், இந்த வைரஸானது பரவி இருப்பதற்கான ஆதாரங்கள், எங்களிடம் வலுவாக உள்ளன. இது மனிதனால் உருவாக்கப்பட்டது கிடையாது மேலும், மரபணு மாற்றம் அடைந்த ஒன்றும் கிடையாது என்பதனை, உளவுத்துறையின் அறிக்கை உறுதிபடுத்துகின்றது.
இதனை நானும் ஏற்கின்றேன். ஆனால், சீனாவில் உள்ள தரமற்ற ஆய்வகங்களில் இருந்து தான், இந்த வைரஸ் பரவி இருக்கின்றது என்பதை நான் உறுதியாகக் கூறுகின்றேன். இது போன்ற, பல தரமற்ற ஆய்வுக் கூடங்களை சீனா இயக்கி வருகின்றது. இவைகளை, தடுத்து நிறுத்துவதற்குத் தேவையானவைகளை நாம் செய்ய வேண்டும். கொரோனா வைரஸ் பரவ ஆரம்பத்தில் இருந்தே, சீனா பலத் தவறான பொய்களைக் கூறிக் கொண்டு இருக்கின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.