தமிழகத்தில் 2 மொழிக் கொள்கை தான்! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

03 August 2020 அரசியல்
epscoronaa.jpg

தமிழகத்தில் 2 மொழிக் கொள்கையேத் தொடரும் என, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

மத்திய அரசுப் புதியக் கல்விக் கொள்கையில், மும்மொழிக் கொள்கையினை அறிமுகப்படுத்தி உள்ளது. அதில், விருப்ப மொழியாக ஹிந்தி, சமஸ்க்ருதம் உள்ளிட்ட மொழிகள் இணைக்கப்பட்டு உள்ளன. இதனால், தமிழகத்தின் பலக் கட்சிகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தன. இது குறித்து, இன்று அரசு அலுவலர்கள் மற்றும் அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

அதில் பேசிய முதல்வர், தமிழகத்தில் 1968ம் ஆண்டு தமிழகப் பாடத் திட்டத்தில் இருந்து இந்தி மொழியானது நீக்கப்பட்டது. தமிழக மக்கள் கடந்த 80 ஆண்டுகளாகத் தொடர்ந்து, இரு மொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளனர். தமிழகத்தின் பலக் கட்சிகளும் இரு மொழிக் கொள்கையில் உறுதியாக இருக்கின்றன. மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள மும்மொழிக் கொள்கையானது, தமக்கு வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், மும்மொழிக் கொள்கையினை மத்திய அரசுப் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும், தமிழகத்தில் 2 மொழிக் கொள்கையேப் பின்பற்றப்படும் எனவும் கூறியுள்ளார். தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ ஏற்படும் பாதிப்புகளை தமிழக அரசு உடனடியாக களையும் என்றும் கூறியுள்ளார்.

HOT NEWS