அமெரிக்காவில் அதிகரிக்கும் ESCAPE ROOM விளையாட்டு? என்ன ஆகும் எதிர்காலம்?

25 August 2020 அமானுஷ்யம்
escaperoom.jpg

உலகில் வித்தியாச வித்தியாசமாக விளையாட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, ப்ளூ வேல், மோமோ உள்ளிட்டவை தீவிரமாக விளையாடப்பட்டு வந்தன. பின்னர், பொதுமக்களிடம் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு காரணமாக, அவைகளை மக்கள் வெறுத்தனர். பலர் இந்த விளையாட்டுக்களால் மரணம் அடைந்ததால், போலீசார் தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கினர்.

இதே போல், தற்பொழுது அமெரிக்கா உள்ளிட்டப் பல நாடுகளில் புதிய விளையாட்டு ஒன்று தீவிரமாக பரவி வருகின்றது. இதனை விளையாடினால், மனம் புத்துணர்ச்சி அடைவதாகவும், மன அழுத்தம் குறைவதாகவும் விளையாடுபவர்கள் கருதுகின்றனர். ESCAPE ROOM எனப்படும் இந்த விளையாட்டில், விளையாடுபவர்கள் ஒரு அறைக்குள் அடைத்து வைக்கப்படுவர். அவ்வாறு அடைத்து வைக்கப்படும் அவர்கள், மீண்டும் அங்குள்ள சாவியினைக் கண்டுபிடித்து தப்பித்து வெளியில் வர வேண்டும்.

இதில் என்ன வித்தியாசம் உள்ளது, சாவியினை எடுத்துக் கொண்டு வீட்டினை விட்டு வெளியில் வந்து விடலாம் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், அவ்வாறு எளிதில் கண்டுபிடித்து விட முடியாது. வரிசையாக பல புதிர்கள், தேடுதல்கள், குழப்பங்கள், சிக்கல்கள், சவால்களைக் கடந்தப் பின்னரே இந்த சாவியானது கண்டுபிடிக்க முடியும்.

அந்த வகையில் தான், இந்த விளையாட்டினை வடிவமைப்பர். இந்த விளையாட்டினை 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் விளையாடலாம். அவ்வாறு விளையாடும் நபர்களின் மனநிலை, உடல்நிலை உள்ளிட்டவை சோதிக்கப்படுகின்றது. பின்னர், அவர்கள் அறைக்குள் நுழைந்தது முதல் அனைத்துமே, கேமிரா மூலம் கண்காணிக்கப்படுகின்றது. அவ்வாறு கண்காணிப்பதன் மூலம், அவர்கள் விளையாட்டினைக் கட்டுப்படுத்த இயலும்.

இது சிறைச்சாலை, விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி மையம், இடைஞ்சலான பகுதிகள், உள்ளிட்டப் பல விதத்தில் அறைகள் வடிவமைக்கப்பட்டு இருக்கும். இந்த விளையாட்டினை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் அதிகளவில் விளையாடப்பட்டு வருகின்றது. கூடிய விரைவில், இவைகளை இந்தியாவிலும் எதிர்பார்க்க இயலும்.

HOT NEWS