எவரெஸ்ட் சிகரத்தை மீண்டும் அளக்கும் சீனா! அளவு குறைந்துள்ளதா?

29 May 2020 அரசியல்
everest.jpg

தற்பொழுது எவரெஸ்ட் சிகரத்தினை சீன அரசாங்கம் அளவிட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த புதன்கிழமை அன்று, சீனாவின் அளவிடும் குழுவானது தீபெத்தின் வழியாக, எவரெஸ்ட் சிகரத்தினை அடைந்தது. தற்பொழுது, எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தினை அளவிட்டும் உள்ளது. அதன்படி, சீனாவின் குழுவால் அளவிடப்பட்டுள்ள எவரெஸ்ட் சிகரத்தின் உயரமானது 8844.43 மீட்டர் ஆகும்.

இந்த அளவானது, நான்கு மீட்டர் குறைவாகும். அதாவது, நேபாளம் அளவீட்டுடன் ஒப்பிடுகையில் சுமார் நான்கு மீட்டர் குறைவாகும். கடந்த ஜனவரி மாதம், எவரெஸ்ட் சிகரத்தினை நேபாளம் அளவிட்டுள்ளது. இதில், வித்தியாசம் இருக்கலாம் எனக் கருதிய சீன அரசாங்கம், மறுமதிப்பீட்டிற்காக அளவிடும் முடிவில் ஈடுபட்டது.

நேபாளத்தின் அளவீட்டின் படி, எவரெஸ்ட் சிகரமானது சுமார் 8848.13 மீட்டர் ஆகும். ஆனால், தற்பொழுது சீனாவின் அளவீட்டின் படி எவரெஸ்ட் சிகரத்தின் அளவானது சுமார் 8844.43 மீட்டர்கள் ஆகும். இது, நான்கு மீட்டர் குறைவாகும். எவரெஸ்ட் மற்றும் இமய மலைகளில் ஏற்படும் மாற்றமானது, உலகளவில் பல சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS