மோடி உயிருக்கு ஆபத்து! குவியும் பாதுகாப்பு படைகள்! பூமி பூஜைக்கு தயாராகும் அயோத்தி!

31 July 2020 அரசியல்
rammandhir.jpg

அயோத்தியில் நடக்கும் பூமி பூஜைக்கு வரும் மோடியின் உயிருக்கு ஆபத்து இருப்பதால், அங்கு பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டு உள்ளன.

கடந்த ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தில் ராமர் கோயில் கட்டும் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. வருகின்ற ஆகஸ்ட் 5ம் தேதி அன்று, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள, பிரதமர் மோடி உட்பட, மொத்தம் 200 பேருக்கு மட்டும் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் பரவி உள்ளதால், தற்பொழுது பொதுமக்கள் இதில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்களா, என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சூழ்நிலையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகளுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளதாக, உளவுத்துறை எச்சரித்து உள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த சூழ்நிலையில், தற்பொழுது அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் இடத்தில், பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி அங்கு வருவதால், அவருக்கு அங்கு அதிக பாதுகாப்பு வழங்கப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது. எனவே, கூடுதல் பாதுகாப்புப் படைப் பிரிவினர் அங்கு குவிக்கப்பட்டு வருகின்றனர். மெட்டல் டிடெக்டர் கருவிகள், மோப்ப நாய்கள் சோதனை என, அப்பகுதியே போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

இந்த சூழ்நிலையில், இராமர் கோயில் கட்டும் பணியினை பொதுமக்கள் பார்க்க வசதியாக, அயோத்தியில் பிரம்மாண்டத் திரைகள் வைக்கப்பட்டு உள்ளன. மேலும், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள டைம்ஸ் சதுக்கத்தில் ஆகஸ்ட் 5ம் தேதி காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை, ஜெய் ஸ்ரீராம் என்றப் பெயரில் இந்த நிகழ்ச்சியானது ஒளிபரப்பப்படுகின்றது.

பூமி பூஜைப் பணிகளில் ஈடுபட்டு உள்ள அயோத்தி ராமர் கோயில் ஜீயர் உள்ளிட்ட, 14 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதியாகி உள்ளது.

HOT NEWS