மதுவின் மீது கூடுதல் வரி விதிப்பு! தமிழக அரசு அதிரடி!

06 May 2020 அரசியல்
tasmac.jpg

தமிழகத்தில் நாளை (07-05-2020) முதல், மதுவிற்பனைக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால், மதுபானப் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஏற்கனவே, இந்தியாவின் பல மாநிலங்களில் மதுவிற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. பல மாநிலங்களில், ஒயின்ஷாப்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் என பலரும் வரிசையில் நின்று, மதுவாங்கிச் செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. இந்த சூழ்நிலையில், இதனைப் பயன்படுத்தி, டெல்லி, கர்நாடாகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள், மதுவின் மீது 70 முதல் 75 சதவிகித வரியினை விதித்தன.

அப்படி இருந்தும், பொதுமக்கள் வரிசையாக நின்று மதுவினை வாங்கிச் செல்கின்றனர். பலரும், சூடம் காட்டுதல், தேங்காய் உடைத்தல் என பல கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். பலரும், ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு சரக்குகளை வாங்கிக் குவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், தமிழகத்திலும் சாராய விற்பனைக்கு தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளைத் தவிர்த்து மற்றப் பகுதிகளில், ஒயின்ஷாப்கள் திறக்கப்பட உள்ளன. இதற்காக, தமிழக அரசின் குடவுன்களில் இருந்து, ஒயின்ஷாப்புகளுக்கு சரக்குகள் ஏற்றிச் செல்லப்படுகின்றன. இந்த சாராயங்களின் மீது, கூடுதல் வரியினை தமிழக அரசு தற்பொழுது விதித்துள்ளது. அதன்படி, குறைந்த அளவிலான மதுவிற்கு, 10% கூடுதல் வரியும், மீடியம் அளவிலான மதுவிற்கு 15% கூடுதல் வரியும் விதிக்கப்பட்டு உள்ளது.

அதாவது பத்து முதல் 20 ரூபாய் வரை, கூடுதல் விலைக்கு விற்கப்பட உள்ளன. அவ்வாறு விற்பதன் மூலம், இத்தனை நாட்களாக ஏற்பட்ட இழப்பீட்டினை தவிர்க்க முடியும் என்றுக் கருதுகின்றனர்.

HOT NEWS