ஜியோவில் முதலீடு செய்யும் பேஸ்புக்! அம்பானி ஹாப்பி அண்ணாச்சி!

22 April 2020 தொழில்நுட்பம்
facekookowner.jpg

ஜியோ நிறுவனத்தின் 10% பங்குகளை வாங்க, பேஸ்புக் நிறுவனம் முடிவ செய்துள்ளது. இது குறித்து, பேஸ்புக் நிறுவர் மார்க் ஜூகர்பெர்க் வீடியோ மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான, ஜியோ நிறுவனம் தொடங்கி, இரண்டு ஆண்டுகள் ஆவதற்குள் இந்தியாவில் மாபெரும் வளர்ச்சியினைப் பெற்று அசத்தியது. இந்த நிறுவனம் தற்பொழுது வரை, சேர் மார்க்கெட்டில் காலடி எடுத்து வைக்கவில்லை. இதனால், இந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய பல வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

இந்நிலையில், தற்பொழுது பொதுமக்கள் வீட்டிலேயே இருப்பதனால், பேஸ்புக்கினை அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், பேஸ்புக்கின் வருவாய் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனை முன்னிட்டு, இந்த உபரி வருவாயினை தற்பொழுது ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.

இந்திய மதிப்பில், சுமார் 44,000 கோடி ரூபாய் அளவிற்கு ஜியோவில் முதலீடு செய்ய உள்ளதாக, மார்க் சூக்கர்பெர்க் அறிவித்துள்ளார். இதனை வைத்துப் பார்க்கும் பொழுது, முழுமையான ஜியோவின் மதிப்பானது, 4.78 லட்சம் கோடியாக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டு உள்ளது. இதனை ஜியோ நிறுவனமும், அதன் நிறுவனர் முகேஷ் அம்பானியும் வரவேற்று உள்ளனர்.

HOT NEWS