போன் கால் திருடர்கள்! பொதுமக்கள் உஷார்

17 August 2019 அரசியல்
phonecall.jpg

பொது மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு. தற்பொழுது, மர்ம நபர்கள் அனைவரிடமும் போன் செய்து, உங்களுடைய வங்கிக் கணக்கைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்கின்றனர். இதன் மூலம் உங்கள் பணத்தை இணையத்தைப் பயன்படுத்தி திருடுகின்றனர். எனவே அனைவரும் உஷார்!

இணையத்தைப் பயன்படுத்தி, குற்றங்கள் செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் அதிகமாகப் பணப்பரிமாற்றம், பணத் திருட்டு ஆகியவையே நடைபெறுகின்றன.

இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த மர்ம கும்பல் ஒன்று, ரகசியமாக இயங்கி வருகிறது. அந்தக் கும்பலைச் சேர்ந்த இளைஞர்கள், ஒவ்வொருவருக்கும் போன் கால் செய்கின்றனர். அவ்வாறு போன் செய்யும் மர்ம நபர்கள், உங்கள் பெயர், உங்கள் முகவரி, உங்கள் வங்கி எண்ணைப் பற்றியும் தெளிவாகக் கூறுகின்றனர். நீங்களும் நம்பி அவர்களின் கேள்விக்கு பதில் சொல்ல ஆரம்பிப்பீர்கள்.

அவர்கள் நாங்கள் இந்த வங்கியில் இருந்து பேசுகிறோம். உங்கள் தகவல்களை சரிபார்க்கிறோம், நீங்கள் இவ்வளவு கடன் வாங்கி உள்ளீர்கள், நீங்கள் கிரெடிட் கார்டு வைத்துள்ளீர்களா? டெபிட் கார்டு வைத்துள்ளீர்களா? அந்தக் கார்டின் நம்பர் என்ன? அந்தக் கார்டின் ரகசியக் குறியீடு சிசிவி எண் என்ன? என்று கேட்கின்றனர்.

இந்தி ரிஷர்வ் வங்கியின் விதிகளின் படி, எந்த வங்கியும் தன்னுடைய வாடிக்கையாளருக்குப் போன் செய்து தகவல்களைப் பெறுவதில்லை. இதனை அனைத்து வங்கிகளும் உணர்த்துகின்றனர். அனைத்து வங்கிகளும், இது குறித்த விழிப்புணர்வு தகவல்கள் கூறப்படுகின்றன.

பெரும்பாலான மக்கள் தற்பொழுது வங்கிக் கணக்கினை வைத்துள்ளனர். இந்த வங்கிக் கணக்கு வைத்துள்ள அனைவருமே தெளிவானவர்கள் எனக் கூற இயலாது. அத்தகைய அப்பாவிகள், இந்த மர்மக் கும்பலிடம் சிக்கினால், கண்டிப்பாக, அவர்கள் கஷ்டப்பட்டு உழைத்துச் சேர்த்தப் பணம் இழக்க வேண்டி வரும். எனவே, இந்தத் தகவலை அனைவரிடமும் கொண்டு சேருங்கள். முடிந்த வரை இதனைப் பகிருங்கள்.

HOT NEWS