குடும்பமும் உடைந்துவிட்டது! கட்சியும் உடைந்துவிட்டது! சுப்ரியா ஸ்டேட்டஸ்!

23 November 2019 அரசியல்
supriyasaulestatus.jpg

யாரும் எதிர்பார்க்காத வகையில், இன்று காலையில் மஹாராஷ்டிராவில் பாஜகவுடன் இணைந்து, தேசியவாத காங்கரிஸ் கட்சியினர் ஆட்சி அமைத்தனர். இதனை அக்கட்சியின் தலைவர் சரத் பவார் கண்டித்துள்ளார்.

சிவசேனா ஆட்சியமைப்பதற்காக தேசியவாத காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் நேற்று மாலை ஆதரவு அளிப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் அறிவித்தார். மேலும், அனைவரும் இணைந்து செயல்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று காலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின் மருமகன் அஜித் பவார், தன்னுடைய ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜக கட்சியின் தேவேந்திர பட்னாவிஸை சந்தித்து பேசினார். பின்னர், இருவரும் ஆளுநர் மாளிகைக்குச் சென்றனர். அப்பொழுது, எங்களிடம் ஆட்சியமைப்பதற்கான மெஜாரிட்டி இருப்பதாக தெரிவித்தனர். இதனால், மஹாராஷ்டிராவில் காலை 5.40 மணியை ஒட்டி, குடியரசுத் தலைவரின் ஆட்சியானது திரும்பப் பெறப்பட்டது. மேலும், தேவேந்திர பட்னாவிஸ் முறைப்படி, பதவியேற்றுக் கொண்டார்.

இது குறித்துப் பேட்டியளித்த, பட்னாவிஸ் மஹாராஷ்டிராவிற்கு கிச்சடி ஆட்சி தேவையில்லை எனவும், நிலையான ஆட்சியே வேண்டும் எனவும் கூறினார். தங்களுடையப் பெரும்பான்மையை சட்டமன்றத்தில் நிரூபிப்போம் எனவும் கூறினார். இந்நிலையில், சரத்பவாரின் மகளும், அஜித் பவாரின் மனைவியுமான சுப்ரியா தன்னுடைய வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில், குடும்பமும் உடைந்து விட்டது. கட்சியும் உடைந்துவிட்டது என அறிவித்துள்ளார். இந்த சம்பவம் தங்களுக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளதாக தெரிவித்துள்ள சிவசேனா கட்சியின் சஞ்சய் ராவத், இது பற்றி விரிவாக விவாதிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

பாஜகவிற்கு ஆதரவளித்து பற்றி எனக்குத் தெரியாது என தெரிவித்தார். ஆனால், ஏற்கனவே, பாஜகவிற்கும், அஜித் பவாருக்கும் இடையில் இரகசியமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்ததாக கூறப்படுகின்றது.

HOT NEWS