விவசாயிகள் பேச்சுவார்தையில் இழுபறி! அரசாங்க உணவினை தவிர்த்த விவசாயிகள்!

06 December 2020 அரசியல்
farmerprotestdelhi.jpg

தொடர்ந்து ஒன்பதாவது நாளாக, விவசாயிகள் போராட்டமானது தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதம் உருவாக்கப்பட்ட 3 விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தற்பொழுது டெல்லியின் நுழைவு வாயில் பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேளாண் மசோதாக்களைத் திரும்பப் பெற வேண்டும் என, பஞ்சாப், ஹரியானா, உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஒன்பதாவது நாளாக போராடி வருகின்றனர்.

டெல்லியில் கடும் குளிர் வாட்டி எடுத்து வருகின்ற சூழ்நிலையிலும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் குளிர் காய்வதற்கு தீ மூட்டிவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் தரப்பில் தெரிவிக்கையில், அடுத்த ஆறு மாதங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் அனைத்தும் எடுத்து வந்துள்ளோம் எனவும், இந்தப் போராட்டத்தில் வெற்றி பெறாமல் ஓய மாட்டோம் எனவும் கூறியுள்ளனர். இது குறித்து மத்திய அரசு சார்பில் வேளாண் துறை அமைச்சர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இருப்பினும், ஒரு விவசாய சங்கத்தினைச் சேர்ந்த உறுப்பினர்கள் கூட, இந்தப் போராட்டத்தில் இருந்து விலகுவதாக இல்லை. வேளாண் துறை அமைச்சர் பேசுகையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் போராட்டத்தினை விட்டு விட்டு, தங்களுடைய குடும்பங்களுக்காகவாவது வீடு திரும்ப வேண்டும் என்றுக் கோரிக்கை வைத்துள்ளார். இந்த நிலையில், ஐந்து கட்டப் பேச்சுவார்த்தைகள் முடிந்துள்ள போதிலும், எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.

தொடர்ந்து, இந்த மசோத்தாகளைத் திரும்பப் பெரும் வரை, இந்தப் போராட்டங்கள் நடைபெறும் என விவசாய சங்கத்தினைச் சேர்ந்தவர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும், அரசு சார்பில் வழங்கப்பட்ட உணவினைக் கூட அவர்கள் ஏற்கவில்லை. தாங்கள் கொண்டு வந்திருந்த உணவுகளையே உண்டனர். இதனால், வருகின்ற ஒன்பதாம் தேதி அன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றுக் கூறியுள்ளனர். அதுவரையிலும், எங்கள் போராட்டங்கள் தொடரும் எனக் கூறியுள்ளனர்.

இவர்களுக்கு ஆதரவாக வருகின்ற டிசம்பர் 8ம் தேதி முதல், அகில இந்திய மோட்டார் காங்கிரஸூம் போராட்டத்தில் ஈடுபட உள்ளது. அதே போல், இந்திய அளவில் போராட்டங்களை முன்னெடுக்கவும், விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

HOT NEWS