விவசாயிகள் போராட்டம்! உண்ணாவிரதம் இருக்கும் விவசாயிகள்! நெடுஞ்சாலையினை மறைத்தனர்!

14 December 2020 அரசியல்
farmersprotestt.jpg

தொடர்ந்து 19வது நாளாக, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று உண்ணாவிரதம் உள்ளிட்டவைகளில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்து உள்ளனர்.

இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதம், மூன்று வேளாண் மசோதாக்களும் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டன. இதற்கு இந்தியாவின் பல மாநிலங்களும் தங்களுடைய எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றன. இதில், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தினைச் சேர்ந்த விவசாயிகள் தங்களுடைய எதிர்ப்பினைக் காட்டுவதற்காக, கடந்த மாதம் போராட்டத்தில் ஈடுபடத் துவங்கினர். அப்பொழுது துவங்கியப் போராட்டத்தால் எவ்விதப் பயனும் ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து, தற்பொழுது தங்களுடைய எதிர்ப்பினைக் காட்டும் பொருட்டு, ஹரியானா வழியாக டெல்லியினை நோக்கிப் படையெடுத்துள்ளனர்.

இந்தியாவின் தலைநகரான டெல்லியின் நுழைவுவாயிலில், பல லட்சம் விவசாயிகள் ஆறு மாதத்திற்கு தேவையான உணவுப் பொருட்களுடன் வந்து அமர்ந்து போராடி வருகின்றனர். பல கட்டப் பேச்சுவார்த்தைகளை மத்திய அரசு இவர்களுடன் நடத்தியப் போதிலும், தங்களுடைய முடிவில் எவ்வித மாற்றமும் இல்லாமல் போராடி வருகின்றன. மத்திய அரசு மீண்டும் விவசாய சங்கங்களுடன் போராட்டத்தில் ஈடுபடும் என கூறியுள்ளது.

ஆனால், 19 நாட்களை இந்தப் போராட்டம் நெருங்கி விட்டதால், விவசாயிகள் அடுத்த கட்டத்திற்கு இந்தப் போராட்டத்தினைக் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனர். டிசம்பர் 14ம் தேதியன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்து உள்ளனர். மேலும், தற்பொழுது ஜெய்ப்பூர் மற்றும் டெல்லிக்கு இடையிலான பாதையினை பஞ்சாப், ஹரியான, உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து வந்துப் போராடும் விவசாயிகள் மறைத்து உள்ளனர்.

HOT NEWS