16 வயது சிறுமி பலாத்காரம்! 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை! பாதிரியாரை நீக்கிய போப்!

02 March 2020 அரசியல்
popefrancis.jpg

கேரளாவில் கிறிஸ்தவ பாதிரியார்கள் பலரும், பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு வருகின்றனர். பிரான்சிஸ் முல்லிக்கல் முதல் பலரும் இந்த வரிசையில் இடம் பெற்றுள்ளனர்.

இந்த வரிசையில், தற்பொழுது ராபின் என்பவருக்கும் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தினைச் சேர்ந்த 16 வயது சிறுமியினை பாலியல் பலாத்காரம் செய்ததாக, அந்த சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டார். அந்த சிறுமியும் கர்ப்பம் ஆனார். ஆனால், போலீசார் நடத்திய விசாரணையில், அந்த சிறுமியினைப் பலாத்காரம் செய்ததாக தகவல்கள் கிடைத்தன.

இதனைத் தொடர்ந்து, பாதிரியார் ராபினை போலீசார் அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில், அவர் தான் அந்த சிறுமியினை கற்பழித்து உள்ளது தெரிய வந்தது. இதனால், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், அவருக்கு மூன்று லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதற்கிடையில், அவர் வெளிநாடு தப்பிச் செல்ல முயன்ற ராபினைப் போலீசார் கைது செய்தனர். இந்த விஷயத்தினை அறிந்த வாட்டிகன் பகுதியில் உள்ள, கிறிஸ்தவ மதத்தின் தலைமைத் தலைவரான போப் பிரான்சிஸ், ராபினை பாதிரியார் பணியில் இருந்து நீக்கியுள்ளார்.

HOT NEWS