வடமாநிலத்தினைக் காட்டிலும் தமிழ்நாடு பாதுகாப்பானது என நம்பி அனுப்பி வைத்தோம்! பாத்திமாவின் தாய் கண்ணீர்!

17 November 2019 அரசியல்
fathima-latheef.jpg

கடந்த சனிக் கிழமை அன்று, சென்னை ஐஐடியில் ஹூயூமானிட்டி அண்ட் டெவலப்மென்ட் பாடப்பிரிவில் எம்இ படித்து வந்த, முதலாம் ஆண்டு மாணவி பாத்திமா லத்தீப் தன்னுடைய ஹாஸ்டல் ரூமில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து, சிபிசிஐடி அதிகாரியின் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகின்றது.

அவர் இறந்ததை அடுத்து, பிரதேப் பரிசோதனைக்குப் பிறகு, அவருடைய உடலானது அவருடையப் பெற்றோரிடம் கொடுக்கப்பட்டது. அப்பொழுது, பாத்திமாவின் போனில், இறந்து போன பாத்திமாவின் வாக்குமூலம் இருந்துள்ளது. அதில், தன்னுடைய மரணத்திற்கு உதவி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் மற்றும் இரண்டு பேராசிரியர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு இருந்துள்ளார். இந்தப் பெண்ணின் தற்கொலைக்குப் பலத் தலைவர்களும், தங்களுடைய கண்டனங்களையும், வருத்தங்களையும் தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் மனு அளித்த பாத்திமாவின் தந்தை, மரணத்திற்குக் காரணமாக இருந்தவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறினார். இதனையடுத்து, அவருடையத் தாய் தன்னுடைய மகள் பாத்திமாவின் மரணம் குறித்து, பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார்.

நம்முடைய நாட்டில் நிலவி வரும் மத வெறுப்பின் காரணமாக, அவளை தலையில் சால் அணிய வேண்டாம் எனக் கூறினோம். மேலும் அவள் படிக்க, முதலில் வாரணாசியில் தான் இடம் கிடைத்தது. ஆனால், அங்கு மதவெறிப் படுகொலைகள் அதிகமாக இருப்பதனால், அங்கு அனுப்ப மாட்டோம் என அவளிடம் கூறினோம். இதனையடுத்து, தமிழகம் என்றால் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பித் தான் இங்கு அனுப்பி வைத்தோம்.

அவளுக்கு சுடிதார் பேண்டின் கயிறினைக் கட்டக் கூடப் பிடிக்காது மிகவும் இறுக்கமாக இருக்கின்றது எனக் கூறுவாள். அதனால், அவள் ஜீன்ஸ் முதலான உடைகளை அணிய, வாங்கிக் கொடுத்தோம். பேண்டின் கயிற்றினை விரும்பாதவள், எப்படி தூக்குக் கயிற்றினை ஏற்றாளோ?

அவள் மிகப்பெரிய அறிவாளி. படிப்பு, கேன்டீன், நூலகம் மற்றும் வீடு என்று வாழ்ந்தவள். அவள் மரணத்திற்கு பின்னர், பல மர்மங்கள் உள்ளன. அதனை நியாயமாக விசாரிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதற்கு நியாயம் கிடைப்பதற்காக, நாங்கள் உயர்நீதிமன்றமென்றாலும், உச்சநீதிமன்றம் என்றாலும் சரி நாங்கள் செல்லத் தயார் எனக் கூறியுள்ளார்.

HOT NEWS