வருடா வருடம் வரும் காதலர் தினம், இந்த ஆண்டும் வந்துவிட்டது. ஆனால், எங்கப்பாடு தான் படும் திண்டாடமாக உள்ளது என, 90ஸ் கிட்ஸ் புலம்புகின்றனர்.
2கே கிட்ஸ்கள் கூட தற்பொழுது ஜோடியாக சுற்றினாலும், இந்த 90ஸ் கிட்ஸின் நிலைமை தான் ரொம்ப மோஷம் என்றுக் கூறலாம். படித்தப் படிப்பிற்கேற்ற வேலையும் கிடையாது. வாழ்க்கையும் ஊசலாட்டமாக உள்ளது. பண வரவு இல்லை. சரி, திருமண வாழ்க்கையாவது அமையுமா என்றால், உனக்கெல்லாம் திருமணம் ஒரு கேடா என்ற காமெடி போல் தான், அவர்கள் வாழ்க்கையும் உள்ளது.
இந்த 90ஸ் கிட்ஸ்களின் உடலமைப்பும் பெரும்பாலும் மாற ஆரம்பித்துவிட்டது. தொப்பை, வழுக்கைத் தலை, நரைமுடி என வாழ்க்கை சோதனையாக மாறிவிட்டாலும், இன்னும் எதிர்வீட்டில் ஏஜ்சல் வந்து குடியேறுவாள் என நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.