இறந்த இருவரின் உடலும் அடக்கம் செய்யப்பட்டன! ஏராளமான போலீஸ் குவிப்பு!

26 June 2020 அரசியல்
sathankulamfuneral.jpg

நேற்று இரவு பிரதேப் பரிசோதனை முடிந்த நிலையில், மரணமடைந்த பென்னிங்ஸ் மற்றும் ஜெயராஜ் ஆகியோரின் உடல்கள் கல்லறையில் அட்டக்கம் செய்யப்பட்டன.

போலீசார் தாக்கியதால் மரணமடைந்த பென்னிங்ஸ் மற்றும் ஜெயராஜ் ஆகியோரின் உடல்கள், மருத்துவமனையில் பிரதேப் பரிசோதனை செய்யப்பட்டது. அந்த உடல்களை வாங்க, அவர்களின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்தனர். இந்த சூழ்நிலையில், அவர்களை சமாதானம் செய்த அதிகாரிகள் அவர்களின் உடல்களை வாங்க வைத்தனர். பின்னர், அவர்களின் உடல்கள் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு இறுதி அஞ்சலிக்காக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.

அவர்களுடைய வீட்டில் இறுதி அஞ்சலிக்காக சிறிது நேரம் அவர்களுடை உடல்கள் வைக்கப்பட்டன. அங்கு திரண்டிருந்த பொதுமக்கள், வியாபாரிகள், கட்சியினர் உட்படப் பலரும் அவர்களின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர், 700க்கும் மேற்பட்ட போலீசாரின் பாதுகாப்புடன், அவர்களுடைய உடல்கள் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு, மேல சாத்தான்குளம் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ சர்ச் கல்லறையில், நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், திமுக தூத்துக்குடி எம்பி கனிமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர். இவர்களின் மரணத்தினை கண்டிக்கும் விதமாக ஜூன் 26ம் தேதி அன்று, தமிழகம் முழுக்க முழுக் கடையடைப்பு கடைபிடிக்கப்படுகின்றது.

HOT NEWS