5,8ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியானது!

29 November 2019 அரசியல்
publicexam.jpg

மத்திய அரசு இனி, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புப் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என அறிவித்திருந்தது. இதனை தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும், தமிழக கல்வியமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பொதுத் தேர்வு கிடையாது என அறிவித்தார்.

ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், தற்பொழுது 5 மற்றும் 8ம் வகுப்பிற்கான, தேர்வு அட்டவணை வெளியாகி உள்ளது. ஐந்தாம் வகுப்புப் பொதுத்தேர்வானது ஏப்ரல் 15ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 20ம் தேதி முடிவடைகின்றது. ஏப்ரல் 15ம் தேதி தமிழ், ஏப்ரல் 17ம் தேதி ஆங்கிலம், ஏப்ரல் 20ம் தேதி கணிதத் தேர்வுகள் நடைபெற உள்ளது.

அதே போல் எட்டாம் வகுப்புப் பொதுத் தேர்வானது, மார்ச் 30ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 17ம் தேதி வரை நடைபெற உள்ளது. மார்ச் 30ம் தேதி தமிழ், ஏப்ரல் 2ம் தேதி ஆங்கிலம், ஏப்ரல் 8ம் தேதி கணிதம், ஏப்ரல் 15ம் தேதி அறிவியல், ஏப்ரல் 17ம் தேதி சமூக அறிவியல் தேர்வு நடைபெற உள்ளது.

இந்தப் பொதுத் தேர்வுகள் காலை 10.15 மணிக்குத் தொடங்கி, மதியம் 12.15 மணி வரை நடைபெற உள்ளது. விவரங்களைப் பதிவு செய்ய 5 நிமிடமும், வினாத்தாளைப் படித்துப் பார்க்க 10 நிமிடமும் வழங்கப்பட உள்ளது. ஹலோ! செங்கோட்டையன் சாரா? எங்க சார் இருக்கீங்க? இங்கப் பொதுத்தேர்வு அறவிச்சுட்டாங்க! என்ன பன்ன போறீங்க!

HOT NEWS