ஆன்லைனில் இறுதிப் பருவத் தேர்வு எழுத ஏற்பாடு! உயர்கல்வித்துறை அமைச்சர்!

04 September 2020 அரசியல்
kpanbalagan1.jpg

இணையத்தினைப் பயன்படுத்தியும், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், கடைசிப் பருவத் தேர்வினை எழுதும் வசதி குறித்து பரிசீலனை செய்து வருவதாக, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்து உள்ளார்.

தமிழகம் முழுவதும் இறுதி ஆண்டுப் பயிலும் மாணவர்களுக்கான தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என, தமிழக முதல்வர் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, அவர்களுக்கு வருகின்ற செப்டம்பர் 30ம் தேதிக்குள் தேர்வுகள் அனைத்தும் நடைபெறும் வாய்ப்புகள் உள்ளன. இவைகளை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து, அவர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார்.

அப்பொழுது வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் பல மாணவர்கள் உள்ளனர். அவர்கள் எவ்வாறு தேர்வு எழுதுவர் என்றுக் கேட்டனர். அதற்குப் பதிலளித்த அவர், அவர்கள் தேர்வு எழுதுவதற்கு ஏற்றாற் போல, இணையத்தில் தேர்வுகள் நடத்துவதுக் குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது. விரைவில், இது குறித்த அறிவிப்புகள் வெளியாகும். மற்றப்படி, தமிழக மாணவர்கள் நேரடியாகச் சென்றுத் தான் தேர்வு எழுத வேண்டும். அவர்களுக்கு ஏற்றாற் போல வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன எனக் கூறியுள்ளார்.

HOT NEWS