ஆந்திராவில் கொரோனாவிற்காக, தற்காலிகமாக மருத்துவமனையாக்கப்பட்ட ஓட்டலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
இந்தியா முழுக்க கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதனால், அந்தந்த மாநிலங்களின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப செயல்பட, மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் காரணமாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பலவும் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றப்பட்டு உள்ளன.
இந்த சூழ்நிலையில், ஆந்திராவில் உள்ள மருத்துவமனை ஒன்று, அங்குள்ள தனியார் ஓட்டலில், கொரோனா நோயாளிகளைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வந்தது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும், செவிலியர்களும் அந்த ஓட்டலிலேயே தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்குத் தேவையான வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன.
இந்நிலையில், விஜயவாடாவில் உள்ள அந்த மருத்துவமனையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அப்பகுதிக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு தங்க வைக்கப்பட்டு இருந்தவர்கள், தற்பொழுது பத்திரமாக வெளியேற்றபட்டு உள்ளனர். இச்சம்பவம், கொரோனா நோயாளிகள் மத்தியில் பீதியினை ஏற்படுத்தி உள்ளது.