கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் பகுதியில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் 7 பேர் பலியாகி உள்ள சம்பவம், அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் காட்டுமன்னார் கோவில் பகுதியில் பலர், சில்லறைத் தொழிலாக பட்டாசினைத் தயாரித்து வருகின்றனர். இதற்கு முறையான அனுமதியும் பெறுவது கிடையாது. அவ்வாறு தயாரிக்கும் பட்டாசுகள் அனைத்தும், அங்கு நடைபெறுகின்ற திருவிழாக்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. அவ்வாறு இன்று காலையில் ஒருவர் வைத்திருந்த சிறிய ஆலையில், பட்டாசு தயாரிக்கும் பணியானது நடைபெற்று வந்தது. அதில், எட்டு பேர் பணிபுரிந்து வந்தனர்.
அந்தப் பட்டாசு ஆலையினை நடத்தி வந்த காந்திமதி உள்ளிட்ட பலரும், காலையில் வேலை செய்து கொண்டிருந்த பொழுது, திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக பலர் தீயில் சிக்கிக் கொண்டனர். அந்த ஆலையின் உரிமையாளர் காந்திமதி உள்ளிட்ட ஐந்து பேர், சம்பவ இடத்திலேயே எரிந்து உயிரிழந்தனர். படுகாயமடைந்த 2 பெண்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.