வடகொரியாவில் கொரோனா! நகரமே சீல்! கிம் அதிரடி!

27 July 2020 அரசியல்
kimjongunse.jpg

வடகொரியாவில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அந்த பகுதிக்கே வடகொரிய அரசாங்கம் சீல் வைத்து உள்ளது.

உலகம் முழுவதும் சீனாவில் இருந்து பரவி வந்த கொரோனா வைரஸால், ஒன்றரை கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த வைரஸ் காரணமாக, கடந்த ஜனவரி மாதம் முதல் உலகின் பல நாடுகள் ஊரடங்கினைக் கடைபிடித்து வருகின்றன. இந்நிலையில், வடகொரிய நாட்டில் கொரோனா பாதிப்பே இல்லை என, தொடர்ந்து வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் கூறி வந்தார்.

தற்பொழுது வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் எல்லைப் பகுதியாக உள்ள, கேசாங் நகரில் ஒரு நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, அப்பகுதிக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. வடகொரியாவில் இருந்து தென் கொரியாவிற்கு சட்ட விரோதமாக அந்த நபர் முதலில் சென்று இருக்கின்றார்.

பின்னர், அவர் மீண்டும் கடந்த வாரம் வடகொரியாவிற்குள் அவர் சட்டவிரோதமாக நுழைந்துள்ளார். அவருடைய உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அவருடைய உடலில் கொரோனா தொற்று இருப்பதால், கொரோனா தொற்று இருக்கின்றதா என சோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதை அடுத்து, அவரை மருத்துவர்கள் தனிமைப்படுத்தினர். அவருடைய நிலைக் குறித்து வட கொரிய அதிபருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அவசர அவசரமாக அரசாங்க அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். பின்னர், கோசாங் நகருக்கு சீல் வைப்பதாக அறிவித்தார். மேலும், கோசாங் நகரில், ஊரடங்கு உத்தரவினையும் பிறப்பித்தார். கோசாங் நகரில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS