உலகின் முதலில் பாதிக்கப்பட்டவர் கண்டுபிடிக்கப்பட்டார்! பதற வைக்கும் வாக்குமூலம்!

28 March 2020 அரசியல்
coronaquarantine.jpg

உலகில் தற்பொழுது 6,00,000க்கும் அதிகமானோர் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 26,000க்கும் அதிகமானோர் இந்த நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்த நோய் பரவக் காரணமாக இருந்த நபர் கண்டறியப்பட்டார்.

சீனாவின் ஊஹான் நகரில் உள்ள விலங்குகள் விற்பனை சந்தையில், இறால் விற்றப் பெண்ணின் பெயர் வே குஷியன்(wei guixian). 57 வயதுடைய இவர், சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் தேதி அன்று, மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், இவருடையக் காய்ச்சலானது குணமாகவில்லை.

இதனால், ஊஹான் பகுதியில் அமைந்துள்ள சிற்றி மருத்துவமனைக்கு அவர் சென்றுள்ளார். அங்கு இவரை பரிசோதனை செய்த மருத்துவர், இவருக்கு வந்துள்ளது மிகக் கொடுமையான நோய் என்றுக் கூறியுள்ளார். அவருக்கு, கடுமையான இருமல், மூச்சுத் திணறல் முதலியவை ஏற்பட்டதாகவும் தற்பொழுது பூரண குணமடைந்து உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தான் அங்குள்ள பொதுக் கழிப்பறையைப் பயன்படுத்தியதாகவும், அதன் மூலமாக தனக்குப் பரவி இருக்கலாம் எனவும் நம்புகின்றார். சீனாவின் தேசிய சுகாதார அமைப்பும் இது குறித்துப் பேசியுள்ளது. அதன்படி, முதலில் பாதிக்கப்பட்ட 27 நபர்களில், 24 பேர் இந்த சந்தையில் வேலை செய்பவர்கள் எனவும் கூறியுள்ளனர். ஆனால், இது குறித்து சீனாவின் தனியார் மருத்துவமனை ஒன்று, தங்களுடைய ஆய்வறிக்கையினை வெளியிட்டு உள்ளது.

அதில், டிசம்பர் ஒன்றாம் தேதி அன்றே, இந்த நோய் உள்ளவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர் எனவும், ஆனால் அவர்களுக்கும், ஊஹான் பகுதியில் அமைந்துள்ள சந்தைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை எனவும் கூறியுள்ளது.

HOT NEWS