கருந்துளையில் இருந்து திடீர் ஒளி வெளியானது! விஞ்ஞானிகள் குழப்பம்!

14 August 2019 தொழில்நுட்பம்
blackhole.jpg

பூமியில் இருந்து சுமார் 26,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கருந்துளையில் இருந்து, விசித்திரமான ஒளி வெளிவருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சாஜிடாரஸ் ஏ என்று அழைக்கப்படும் இந்த கருந்துளையில், இருந்து திடீரென்று வெளிச்சம் வருவதாக அதனை ஆராய்ச்சி செய்யும் டுவான் டூ தெரிவித்துள்ளார். ஹவாய் நகரில் உள்ள கெக் 2 என்ற தொலைநோக்கியைக் கொண்டு இதனை பார்வையிட்ட பொழுது, கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இத்தகைய நிகழ்வு நடந்துள்ளதாகவும், அதனைத் தற்பொழுது கண்டுபிடித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

கெக் 2 என்ற தொலைநோக்கியைக் கொண்டு இதனை பார்வையிட்ட பொழுது, கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இத்தகைய நிகழ்வு நடந்துள்ளதாகவும், அதனைத் தற்பொழுது கண்டுபிடித்துள்ளதாகவும் கூறியுள்ளார். இது குறித்து, என்ன விளக்கம் அளிப்பதென்று விஞ்ஞானிகள் குழப்பத்தில் உள்ளனர். இது போன்று இதற்கு முன் நிகழ்ந்ததில்லை என்பதால், அவர்கள் தற்பொழுது குழப்பத்தில் உள்ளனர்.

HOT NEWS