சிலி நாட்டில் விமானம் மாயம்! 38 பேர் கதி என்ன?

11 December 2019 அரசியல்
aircraftmissing.jpg

pic credit:-twitter.com/@Christ_Peter2nd

சிலி நாட்டில் அந்நாட்டின் விமானப்படைக்குச் சொந்தமான விமானம் மாயமானது. இதனால், அந்த விமானத்தில் பயணித்த 38 பேரும் மாயமாகி உள்ளனர்.

சிலி நாட்டில் மாலை 4.53 மணியளவில், ஹெர்குலிஸ் சி 130 என்ற விமானம், அண்டார்டிகாவில் உள்ள விமானப்படைத் தளத்திற்கு புறப்பட்டது. அங்குப் பராமரிப்புப் பணிகள் இருப்பதால், அங்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த விமானத்தில், 21 விமானப் படையினரும், 17 சிப்பந்திகளும் இருந்துள்ளனர். விமானம் கிளம்பி சரியாக ஒன்றரை மணி நேரம் கழித்து, அதனுடன் இருந்து வந்த தகவல் தொடர்பு துண்டானது. இதனால், விமானக் கட்டுப்பாட்டு அறையில் குழப்பம் ஏற்பட்டது. தொடர்ந்து, விமானத்தினைத் தொடர்பு கொள்ளும் முயற்சி பலனளிக்காததால், விமானத்தினைத் தேடும் பணி முடிக்கிவிடப்பட்டது.

அப்பொழுது, தொடர்ந்து ஏழு மணி நேரமாக நடத்தப்பட்ட தேடுதல் முயற்சியின் பலனாக, 9ம் தேதி காலையில் விமானம் விபத்துக்குள்ளாகி உள்ளது என அந்நாட்டு விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதற்கு வருத்தம் தெரிவித்துள்ள அந்நாட்டு அதிபர் செபாஸ்டியன் பினாரே, விமானம் விபத்துக்குள்ளாகி இருப்பதாகவும், அதில் பயணித்தவர்களின் கதி என்ன என்பதுப் பற்றியத் தகவல் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.

HOT NEWS