இந்திய அளவில் மிகவும் அதிக பிரபலமானவர்களின் பட்டியலை, இன்று போர்பஸ் இந்தியா வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவைச் சேர்ந்த, பிரபலங்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்தப் பட்டியல், அவர்களுடைய வருமானத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் படி, முதல் இடத்தில் சல்மான் கான் உள்ளார். அவருடைய வருமானம் ஆண்டுக்கு 253 கோடி ரூபாய். இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஏ.ஆர்.ரகுமான் 66 கோடி ரூபாயுடன் 11வது இடத்தில் உள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 14 இடத்தில் உள்ளார். தளபதி விஜய் 30 கோடி ரூபாய் மதிப்புடன் 26வது இடத்தில் உள்ளார். நடிகர் சீயான் விக்ரம் 29வது இடத்தில் உள்ளார். இவரைத் தொடர்ந்து, சூர்யா மற்றும் விஜய் சேதுபதி 34 வது இடத்திலும், நடிகர் தனுஷ் 53 வது இடத்திலும் உள்ளார். தமிழ் நடிகை நயன்தாரா 69வது இடத்தை பிடித்துள்ளார். இவரைத் தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசன் 71வது இடத்தில் உள்ளார்.