செர்னோபிலை நெருங்கும் காட்டுத் தீ! அச்சத்தில் பொதுமக்கள்!

15 April 2020 அரசியல்
chernobyl.jpg

உக்ரைன் நாட்டில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயானது, தற்பொழுது செர்னோபில் அணு உலைக்கு அருகில் பரவ ஆரம்பித்து உள்ளது.

செர்னோபில் பகுதியில் தற்பொழுது காட்டுத் தீயானது, வேகமாகப் பரவி வருகின்றது. கடந்த சில நாட்களாக, உக்ரைன் நாட்டின் வடக்குப் பகுதியில் காட்டுத் தீயானது வேகமாகப் பரவி வருகின்றது. இந்த தீயிணை அணைக்கும் முயற்சியில், பல தீயணைப்பு வீரர்களும், மீட்புத் துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

காட்டுத் தீயானது, அப்பகுதியில் எரிந்து கொண்டு இருப்பதால் அந்நாட்டின் வடக்குப் பகுதியில் ரேடியேசன் அளவு அதிகரித்து இருப்பதாக, அந்நாட்டின் க்ரீன் பீஸ் அமைப்புத் தெரிவித்துள்ளது. மேலும், தற்பொழுது தீ எரியும் பகுதியில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் தான் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். 1986ம் ஆண்டு நடைபெற்ற செர்னோபில் விபத்திற்குப் பிறகு, அப்பகுதியில் பொதுமக்கள் வசிப்பதில்லை.

இந்நிலையில், இந்த தீயானது விபத்துக்குள்ளான அணுஉலைப் பகுதியினை நெருங்கி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்பொழுது அந்த அணு உலையானது செயல்பாட்டில் இல்லை. இதனால், பயப்படும்படி எதுவும் ஆகாது எனக் கூறப்பட்டு வருகின்றது. இருப்பினும், இந்தப் பகுதியினை தீயானது நெருங்குவதற்குள் அணைக்க, தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர்.

HOT NEWS