பஞ்சாப் அண்ட் மஹாராஷ்ட்ரா கோ-ஆப்ரேட்டிவ் வங்கியில், சுமார் 4355 கோடி ரூபாய்க்கு கையாடல் மற்றும் ஊழல் நடைபெற்றுள்ளதாக, புகார் எழுந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து விசாரித்து வருகிறது போலீஸ். இதில் முக்கியத் திருப்பமாக, பிஎம்சி வங்கியின் முன்னாள் இயக்குநர் சுர்ஜித் சிங் அரோராவினை கைது செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸ், விசாரிக்க கால அவகாசம் கோரியது. அவர்களின் கோரிக்கையை ஏற்று வரும் 22ம் தேதி வரை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனையடுத்து, அவரை போலீசார் இரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். மேலும், முன்னாள் நிர்வாக இயக்குநர் ஜோய் தாமஷ் என்பவரையும், 14 காவலில் எடுத்து விசாரித்து வருகின்றது மும்பை போலீஸ். இந்த ஊழலில், பல முக்கியப் புள்ளிகள் சிக்குவார்கள் என எண்ணப்படுகின்றது.