அண்ணாமலை ஏன் பாஜகவில் இணைந்தார் தெரியுமா?

26 August 2020 அரசியல்
ipsannamalaibjp.jpg

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, தற்பொழுது பாஜகவில் இணைந்துள்ளார்.

பெங்களூரு நகரில் 2019 வரை, சுமார் ஒன்பது ஆண்டுகளாக டிசிபி ஆக பணிபுரிந்து வந்தவர் அண்ணாமலை. இவர், அம்மாநிலத்தின் சிங்கம் போலீஸாகப் புகழப்பட்டவர். திடீரென்று, தன்னுடையப் பதவியினை கடந்த ஆண்டு ராஜினாமா செய்தார். பின்னர், தமிழகத்திற்குத் திரும்பி, விவசாயம், தற்சார்பு பொருளாதாரம் உள்ளிட்டவைகளின் மீது கவனம் செலுத்தினார்.

அவர் இடையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தினை சென்று சந்தித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து, அவர் ரஜினிகாந்த் ஆரம்பிக்கும் புதிய கட்சியில், முதல்வர் வேட்பாளாராக தேர்ந்தெடுக்கப்படுவார் என, பலரும் ஆரூடம் கூறினர். ஆனால் அவரோ, நான் அரசியலுக்கு வர இன்னும் காலம் உள்ளது என்றுக் கூறி வந்தார். இந்த சூழ்நிலையில், நேற்று திடீரென்று அவர் டெல்லிக்குச் சென்றார்.

அதனால், அவர் பாஜகவில் இணைய உள்ளார் என பல செய்திகள் வெளியாகின. அதனை உறுதிப்படுத்தும் வகையில், அவர் நேற்று பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா முன்னிலையில், பாஜகவில் இணைந்தார். அவருடன் மாநிலத் தலைவர் எல் முருகனும் இருந்தார். இது குறித்து அண்ணாமலை பேசுகையில், பாஜகவில் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கின்றது. மோடியின் மீது பெரிய மரியாதை உள்ளது. அவரை பின்தொடர்கின்றேன் எனவும் கூறியுள்ளார்.

HOT NEWS