பேஷ்புக் பணத்தைத் தடை செய்ய பிரான்ஸ் திட்டம்! விரைவில் அறிவிப்பு!

13 September 2019 தொழில்நுட்பம்
libracryptocurrency.jpg

இந்த பிட்காயின் பிரபலமடைந்தாலும் அடைந்தது, அடுத்தடுத்து பல கிரிப்டோகரன்சிகள் வந்து கொண்டே உள்ளன. அதன் வரிசையில், தற்பொழுது பேஸ்புக் நிறுவனமும் இணைந்துள்ளது.

தன்னுடைய சொந்தப் பணமான லிப்ரா என, அழைக்கப்படக் கூடிய கிரிப்டோகரன்சியை வடிவமைப்பதில், பேஸ்புக் நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. வரும் 2020ம் ஆண்டு தொடக்கத்தில் இந்த பணம் புழக்கத்திற்கு வரும் என தெரிகிறது.

இதனைப் பற்றிய பேச்சுக்கள் வந்த உடனேயே, இதற்கு எதிர்ப்புகளும் வரத் தொடங்கிவிட்டன. பல நாடுகளும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், தற்பொழுது பிரான்ஸ் நாடு, இதனைத் தடை செய்ய உள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன.

சட்டத்திற்குப் புரம்பான செயல்களுக்கு, இந்த கிரிப்டோகரன்சிகள் பயன்படுத்தப்படுவதால், இதனைத் தடை செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளது. இந்த லிப்ரா பணத்தினைப் பயன்படுத்தும் வகையில், பேபால், விசா மற்றும் மாஸ்டர் உள்ளிட்டப் பல நிறுவனங்களுடன் ஏற்கனவே ஒப்பந்தங்கள் முடிந்துவிட்டன.

இந்தப் பணம் பயன்பாட்டிற்கு வந்தவுடன், வங்கிக் கணக்கு இல்லாத குழந்தகைள் கூட இதனைப் பயன்படுத்த முடியும் என பேஸ்புக் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் வர்த்தகம் உள்ளிட்டப் பல செயல்களுக்கு, எவ்விதத் தடையுமின்றி, குறைந்த செலவில் அதிக லாபம் பெறும் வகையிலேயே இதனை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் விரைவில் பிட்காயின் தடை செய்யப்பட உள்ள நிலையில், இந்த லிப்ரா கரன்சியை இந்திய அரசாங்கம் அனுமதிக்குமா என்பது கேள்விக்குறி தான்!

HOT NEWS