இந்த உலகிற்கு வரும் பறக்கும் தட்டுக்கள், இந்த உலகின் பிரதிபலிப்பிலிருந்து அல்லது இதனைப் போன்று உள்ள மற்றொரு உலகில் இருந்து வருபவை என, பிரஞ்சு விஞ்ஞானி கூறியுள்ளார்.
மிஸ்டிரியஸ் யுனிவர்ஸ் என்ற வலைதளத்தில், தற்பொழுது அதிகாரப்பூர்வ செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதில், பிரான்ஸ் வெளியுறவு மற்றும் புலனாய்வு அமைப்பின் முன்னாள் தலைவரான ஆலியின் ஜூலியட் பகிரங்க அறிவிப்பினை அறிவித்தார். அதில், இந்த உலகிற்கு ஏலியன்கள், அடிக்கடி ஏலியன்கள் வந்து செல்கின்றன என்கின்றார்.
மேலும் அவர், யூஎப்ஓ ஏ மேட்டர் ஆஃப் ஸ்டேட்ஸ் என்ற டாக்குமென்ட்ரியில் நடித்துள்ளார். அது குறித்து அவர் கூறுகையில், அனைத்து நாட்டிற்கும் மிகவும் சவாலான விஷயம் என்றால், அது பாதுகாப்பு தான். அமெரிக்கக் கடற்படையின் அந்த யூஎப்ஓ வீடியோக்கள் பற்றித் தான் அனைவரும் பேசி வருகின்றனர். ஒரு சில சமயம், இது போன்ற வீடியோக்கள் லீக்காகி விடுகின்றன. அவ்வாறு லீக்காகு வீடியோக்கள், விஞ்ஞானிகளுக்கு தலைவலியாகி விடுகின்றன.
ஏனெனில், வீடியோக்களில் பதிவாகின்ற இந்த பறக்கும் தட்டுகள், மனிதர்களால் உருவாக்கப்பட்டது கிடையாது. அவ்வாறு, உருவாக்கவும் முடியாது. இவைகளைப் பற்றிய ரகசியங்களை, எவ்வளவுக்கு எவ்வளவு இரகசியமாக வைத்திருக்க முடியுமோ, அந்த அளவிற்கு அரசாங்கம் இரகசியமாக வைத்திருக்கும். இரகசியங்களைப் பாதுகாப்பதற்காகவே, பல நாடுகளும் பெரிய பட்ஜெட்டினை தீட்டுகின்றன.
ஒரு சில விஷயங்கள் நம் கண் முன்னே இருந்தாலும், அவைகளை நம்மால் கவனிக்கவோ அல்லது காணவோ இயலாது. அது போலத் தான், இந்த பறக்கும் தட்டுகளும். இவைகள், பெரும்பாலும் வேற்றுக் கிரகத்தில் இருந்து வருவதாக அனைவரும் நம்புகின்றனர். என்னைப் பொறுத்தவரையில், நம் புவியின் பிம்பம் அல்லது நம் புவியினைப் போன்ற ஒரு எதிரொளிப்பு அல்லது அதனைப் போன்ற கிரகத்தில் இருந்து தான், இந்த பறக்கும் தட்டுகள் வருகின்றன எனக் கூறியுள்ளார்.