2021 வரை இலவச ரேஷன் பொருட்கள்! மம்மதா அதிரடி!

01 July 2020 அரசியல்
mamatabanajee.jpg

வருகின்ற 2021ம் ஆண்டு ஜூன் மாதம் வரை, ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்க உள்ளதாக, மேற்கு வங்க முதல்வர் மம்மதா பேனர்ஜி அறிவித்துள்ளார்.

வருகின்ற நவம்பர் மாதம் வரை, இந்தியாவில் உள்ள அனைவருக்கும் இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என, பாரதப் பிரதமர் மோடி அறிவித்தார். இதற்குப் போட்டியாக, மேற்கு வங்க முதல்வர் மம்மதா பேனர்ஜி புதிய அறிவிப்பினை, அம்மாநில மக்களுக்கு அறிவித்துள்ளார். அதில், வருகின்ற 2021ம் ஆண்டு ஜூன் மாதம் வரை, இலவசமாக ரேஷன் பொருட்களானது, மேற்கு வங்கத்தில் விநியோகிக்கப்படும் என்றுக் கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் அதிக மக்கள் இருப்பதாகவும், ஆனால் 60% மக்களுக்கான ரேஷன் பொருட்களே மத்திய அரசால் நமக்கு வழங்கப்படுகின்றது எனவும் 130 கோடி ரூபாய் நிவாரணம் கேட்ட நிலையில், அதற்கு இன்னும் மத்திய அரசிடம் இருந்து எவ்விதப் பதிலும் வரவில்லை எனவும் கூறியுள்ளார். அதே சமயம் புதிய ஊரடங்கு தளர்வுகள் குறித்தும் கூறியுள்ளார்.

காலை 5 மணி முதல் 10 மணி வரை ஒரு சிலத் தளர்வுகள் இருக்கும் எனவும், பின்னர் கடுமையான முழு ஊரடங்கானது கடைபிடிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். அதே போல், திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர் வரையிலும், இறுதிச் சடங்குகளில் 25 பேர் வரை, அனுமதிப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார். அதே போல், காலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை, வாக்கிங் செல்ல அனுமதி வழங்கப்படுதவதாகவும் அவர் தெரிவித்தார்.

HOT NEWS