சஹோ படத்தின் கதையானது, என்னுடைய படத்தின் கதை என்று பிரெஞ்ச் பட இயக்குநர் ஜெரோம் சாலே குற்றம் சாட்டியுள்ளார். சஹோ படத்தினைப் பார்த்த ரசிகர்கள், ஜெரோம் சாலேவின் டிவிட்டர் கணக்கினை டேக் செய்து, இந்தப் படம் நீங்கள் 2008ல் உருவாக்கிய லார்கோ வின்ச்சைப் போல் உள்ளது, எனக் கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஜெரோம் சாலே, இப்படத்தினைப் பற்றி குற்றம் சாட்டியுள்ளார். அவர், கதையத் திருடுனா, முழுசா திருடுங்க, இப்பிடி அறைகுறையாத் திருடி ஏன், என் படத்தை வீணாக்குறீங்க எனக் குறிப்பிட்டுள்ளார். அவர் இயக்கிய லார்கோ வின்ச் என்றப் படம் 2008ம் ஆண்டு வெளியானது. அப்படத்தினையே, சஹோ என தெலுங்கில் உருவாக்கியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
It seems this second "freemake" of Largo Winch is as bad as the first one. So please Telugu directors, if you steal my work, at least do it properly?
— Jérôme Salle (@Jerome_Salle) September 1, 2019
And as my "Indian career" tweet was of course ironic, I'm sorry but I'm not gonna be able to help. https://t.co/DWpQJ8Vyi0
மேலும் இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள ஜெரோம் சாலே, லார்கோ வின்ச் படத்தின் முதல் காப்பியை விட, இரண்டாவது காப்பி படுமோசமாக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே, 2018ம் ஆண்டு த்ரிவிக்ரம் இயக்கத்தில், பவன் கல்யான் நடிப்பில், வெளிவந்த அக்ஞ்யாதவாசி திரைப்படமும், இந்த லார்கோ வின்ச் படத்தின் காப்பி தான் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையெல்லாம் பார்க்கையில், இந்தியத் திரைத்துறையில் எனக்குப் பிரகாசமாக வாய்ப்புகள் உள்ளதாகவும் அந்த இயக்குநர் தெரிவித்தார்.