உலகிலேயே மிக உயர்ந்த விலையுயர்ந்த விண்கல்லானது, 2000ம் ஆண்டு சீனாவின் ப்பூகாங்க் என்றப் பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இது 450 கோடி ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்றுக் கூறப்படுகின்றது.
இது 1003 கிலோகிராம் எடை கொண்டது. இதில், ஓலிவியன் கற்கள், இரும்பு, தங்கம் முதலியவை உள்ளன. இந்த கல்லானது, ஒரு சீனாவினைச் சேர்ந்த டீலர் ஒருவரால் கண்டறியப்பட்டது. அவர், அந்தக் கல்லை எடுத்து ஆய்வு செய்வதற்காக, 20 கிலோ எடையுள்ள ஒரு பகுதியினை வெட்டி எடுத்தார். அதனை, அமெரிக்காவின் அரிசோனா ஆய்வு மையத்திற்கு அனுப்பினார்.
இந்தக் கல்லானது, 2000ம் ஆண்டில் கண்டறிய்யப்பட்டாலும், தற்பொழுது வரை மிகவும் விலை உயர்ந்தக் கல் என்றால், அது இது தான். மிகவும் அதிக எடையுள்ள இந்தக் கல்லில், பல தங்கங்கள் ஒட்டியுள்ளன. இதனால், இது மிகவும் விலையுயர்ந்ததாக கருதப்படுகின்றது. இந்தக் கல்லானது, தற்பொழுது வியன்னாவில் உள்ள நேச்சுரல் ஹிஸ்டரி ஆப் மியூசியத்தில் வைக்கப்பட்டு உள்ளது.