உலகில் ஆராய்ச்சியில் உள்ள வியப்பூட்டும் வாகனங்கள்

12 June 2019 தொழில்நுட்பம்
futurecars.jpg

பொதுவாக நாம் வாகனங்களை வாங்குவதற்க்கு பணம் செலவிடுவதைப் போலவே, வாகனங்களை தயாரிக்க பல ஆயிரம் கோடிகளை வாகனம் தயாரிக்கும் நிறுவனங்கள் செலவிடுகின்றனர். பெரும்பாலான நிறுவனங்கள் தான் செய்யும், வாகன ஆராய்ச்சி வெற்றிப் பெரும் வரை செலவிடுகின்றனர். இந்நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையிலேயே, வாகனங்களை உருவாக்குகின்றனர்.

ரய்டுங் அசிஸ்ட்
தயாரிப்பு நிறுவனம்-ஹோண்டா

இது முற்றிலும் AI எனப்படும் ARTIFICIAL INTELLIGECE தொழில்நுட்பத்தில், உறுவாக்கப்பட்டு வருகிறது. இதன் சிறப்பம்சமே இதன் உணர்திறனே. இந்த வாகனம் சாலையின் தன்மைக்கேற்ப தகவமைத்து கொள்ளும் விதத்தில், உருவாகி வருகிறது. இதனை நம் கையில் கட்டும் ஸ்மார்ட் வாட்ச்களின் மூலம், கட்டுப்படுத்தும் வகையில் இருக்கும் என ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனைப் பார்க்கும் பொழுது, பேட்மேன் படத்தில் வரும் வாகனம் நமக்கு ஞாபகம் வருகிறது.

கான்சப்ட்-ஐ
தயாரிப்பு நிறுவனம்-டொயோட்டா

இதுவும் "AI" தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது. எப்பொழுதும் வாடிக்கையாளர்களின் மனதிருப்தியை மட்டுமே, முக்கியமாகக் கருதி செயல்படும் "டொயோட்டா", இந்த ஆராய்ச்சியில் பல ஆயிரம் கோடிகளை, முதலீடு செய்துள்ளது. நான்கு சக்கர வாகனமாக உருவாகி வரும் இது, டொயோட்டா நிறுவனத்தின் எதிர்காலத்தை மாற்றும் என்றால் மிகையில்லை. கான்சப்ட்-ஐ என்றப் பெயரிலிருந்தே நாம் இதனை ஒரு எலக்ட்ரானிக் கார் எனப் புரிந்து கொள்ளலாம்.

பி.எம்.டபிள்யு-ஜீனா
தயாரிப்பு நிறுவனம்-பி.எம்.டபிள்யு

பி.எம்.டபிள்யு என்றாலே, நமக்கு ஞாபகம் வருவது சொகுசுப் பயணமே. இந்த முறை தன் பங்கிற்கு பி.எம்.டபிள்யு நிறுவனமும், பல மில்லியன் டாலர் பணத்தை ஜூனா என்ற ஆராய்ச்சியில், முதலீடு செய்துள்ளது. ஜூனா என்றப் பெயரில் காரை அவர்கள் உருவாக்கக் காரணம், அதன் வடிவமே. ஆம், உலகில் இதுவரை யாரும் பயன்படுத்தாத உலோகத்தைக் கொண்டு, உருவாக்கி வருகின்றனர். மேலும், இதில் பயன்படுத்தியுள்ள தொழில்நுட்பம் இதுவரை யாரும் வாகன உலகில் பயன்படுத்தவில்லை, எனக் கூறுகின்றனர்.

கூகுள் கார்
தயாரிப்பு நிறுவனம்-கூகுள்

இதைப் பற்றி நாம் ஏற்கனவே அறிந்திருப்போம். முற்றிலும் தானியங்கி முறையில் இயங்கக் கூடிய இந்த காரானது, ஓட்டுநரின் அனுமதியுடனே இயங்கும் வகையில், உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஆராய்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாம் இந்தக் காரை விரைவில் புழக்கத்தில் காணலாம். இதில் பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ள கூகுள் நிறுவனம் சில வாரங்களுக்கு முன், தன்னுடையச் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக செய்து முடித்தது.

விரைவிலேயே நாம், இதிலுள்ளப் பல வாகனங்களை நம் வீதிகளில் காண வாய்ப்பு உண்டு.

HOT NEWS