உலகை மாற்றப்போகும் வருங்காலக் கண்டுபிடிப்புகள்

12 June 2019 தொழில்நுட்பம்
vr.jpg

உலகம் ஆரம்பம் முதலே மாற்றத்தை மட்டுமே கொண்டுள்ளது. இதற்குக் காலம் ஒரு முக்கியக் காரணம் என்றால் சூழ்நிலைகளும் மற்றொரு காரணமாக அமைகிறது. பலக் கண்டுபிடிப்புகள் பல்லாயிரம் உயிர்களை அழித்தும், காத்தும் இருக்கின்றன. இருப்பினும் கண்டுபிடிப்புகள் மூலமே நம்மால் வாழ்வின் அடுத்தக் கட்டத்திற்குச் செல்ல முடியும். அப்படிப்பட்டப் பலக் கண்டுபிடிப்புகள் சில இவ்வுலகை முற்றிலும் மாற்றியுள்ளன. அவ்வாறு எதிர்கால உலகத்தை மாற்றப் போகிறக் கண்டுபிடிப்புகளைப் பற்றி நாம் காண்போம்.

பவர்ட்டு எக்ஸோ ஸ்கெலிட்டன்

நாம் அனைவரும் ஸ்டிபன் வில்லியம் ஹாவ்கிங்கைப் பற்றித் தெரிந்திருப்போம். இவரால் எழுந்து நடக்கவோ அல்லது அசையவோ முடியாது. இவரை மாடாலகக் கொண்டு இந்தப் பவர்ட்டு எக்ஸோ ஸ்கெலிட்டனை உருவாக்கி வருகின்றனர். இதன் மூலம் எழுந்து நடமாட முடியாதவர்களால் சாதாரணமானவர்களைப் போல அனைத்து வேலைகளையும் செய்ய இயலும். இந்த ஆராய்ச்சியில் பல நிறுவனங்கள் முழு வீச்சில் இறங்கி செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் இதற்குத் தேவையான தொழில்நுட்ப வசதிகள் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டியுள்ளதால் இந்தக் கண்டுபிடிப்பு வெளிவரக் குறைந்தது பத்து ஆண்டுகளாவது ஆகும்.

ஆகுமென்டட் ரியாலிட்டி

தற்பொழுது வீ.ஆர்-ன் பயன்பாடு அதிகரித்துவிட்ட நிலையில் பல பன்னாட்டு முன்னணி நிறுவனங்கள் இந்தத் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளன. இது முற்றிலும் சிறிய அளவு அல்லது அன்றாடம் பயன்படுத்தும் கருவியாகவே மாற்றம் பெற்று வரவிருக்கிறது. இதனுடன் நாம் உரையாடலாம்,கேள்விக் கேட்கலாம், ஆலோசனைப் பெறலாம். முற்றிலும் செயற்கையாக உருவாக்கப்பட்ட மனிதனைப் போல இது செயல்பட உள்ளது.

ஓட்டுநரில்லாதக் கார்கள்

இதன் இறுதிக்கட்ட ஆராய்ச்சியில் சாம்சங்கும், கூகுளும் உள்ளன. இந்நிறுவனங்கள் பல முறை சோதனை ஓட்டத்தை நடத்தி முடித்தப் போதிலும் சில சட்ட மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களினால் இன்னும் ஆராய்ச்சியிலேயே உள்ளது. இத்தகையக் கார்களை ஓட்ட ஆட்கள் தேவையில்லை. இது முற்றிலும் தானாகச் செயல்படும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நாம் செல்ல வேண்டிய இடத்தின் குறிப்பைப் பற்றிக் கூறினால் மட்டும் போதும். இது மிக விரைவானப் பாதையைத் தேர்வு செய்து தான் செல்ல வேண்டிய இலக்கை எளிதாக அடந்துவிடும்.

ஏ.ஐ.(ARTIFICIAL INTELLIGENCE) ai

இதுப் பலத் தொழில்களிலும் பல நாடுகளிலும் பயன்பாட்டிற்கு வந்துவிட்ட போதிலும் இன்னும் உயர்ந்த இடத்தைத் தொடவில்லை. இது இன்னும் ஆராய்ச்சி நிலையிலேயே உள்ளது. இதுப் பயன்பாட்டிற்கு வந்தப் பிறகு மிக விரைவாக செயற்கை மனிதர்களையும் அதன் பயன்களையும் நாம் கண்கூடாகப் பார்க்கலாம்.

இக்கண்டுபிடிப்புகளில் ஏ.ஐ.யைத் தவிர்த்து, மற்ற அனைத்துமே மனிதனின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடியவை என்பதால், எந்தக் கவலையுமில்லை. ஆனால், இந்த ஏ.ஐ.யை சரியான விதத்தில் சரியான முறையில் உருவாக்கவில்லை எனில், கண்டிப்பாக மிக விரைவாகவே நாம் நம்முடைய கடைசி காலத்தைப் பார்க்க நேரிடும்.

HOT NEWS