சந்தைக்கு வர உள்ள வியப்பளிக்கும் ஸ்மார்ட்போன்கள்

12 June 2019 தொழில்நுட்பம்
futurephones.jpg

கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளன என்றாலும், உலகளவில் பிரபலமடைந்தவை எனப் பார்த்தால், வெகு சிலக் கம்பெனிகளே. அதிநவீன மற்றும் சிறந்த தொழில் நுட்பம், குறைந்த விலை ஸ்மார்ட்போன்களையே மக்கள் அதிகம் விரும்புகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டே, ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பல்லாயிரம் கோடிjf பணத்தை ஆராய்ச்சிக்காக செலவிடுகின்றன. இத்தகைய சூழலில், தற்போது இறுதிக் கட்ட ஆராய்ச்சியில் உள்ள சில ஸ்மார்ட்போன்களைப் பற்றிப் பார்ப்போம்.

த டிராஸ் போன்

இந்த ஸ்மார்ட்போனானது எளிதில் வளையும் தன்மையுள்ள தொடுதிரையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை ஸ்மார்ட்வாட்ச்களைப் போன்று, கையில் அணிந்து கொள்ளும் அம்சத்துடன் வடிவமைத்துள்ளனர். இது முற்றிலும் மேம்படுத்தப்பட்ட, உலோகத்தால் உருவாக்கப்பட்டுள்ளதால் இது மிகப் பாதுகாப்பானது எனக் கூறலாம். இன்று வரை யாரும் பயன்படுத்தாத தொழில்நுட்பத்தை, இதில் பயன்படுத்தியுள்ளனர்.


லெனோவோ சி-பிளஸ்

ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் அனைத்திற்கும் முன்னோடியாகத் திகழ்வது "லெனோவோ" எனக் கூறினால், அது மிகையாகாது. இவர்களின் கண்டுபிடிப்புகளையே, மற்றக் கம்பெனிகள் சில மேம்பாட்டுடன், தன்னுடைய மாடலாக வெளியிடுகின்றனர். அந்த அளவிற்கு இந்த நிறுவனம் சிறந்ததையே, தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. அந்த வகையில் இந்நிறுவனம் தற்ப்போது "சி-பிளஸ்" எனப்படும் புதிய மாடலை வடிவமைத்து வருகிறது. இந்த ஸ்மார்ட்போனும் வளையும் தன்மையுடன், கையில் அணிந்து கொள்ளும் வகையில் உருவாக்கி வருகிறது. பல தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் இறுதிக் கட்ட ஆராய்ச்சியில் உள்ள, இந்த ஸ்மார்ட்போன் விரைவிலேயே வியாபாரத்திற்கு வரும் என எதிர்ப்பார்க்கலாம்.

நெக் ப்பிளிப் போன்

இது வரைப் பயன்படுத்தாத இயங்குதளத்துடன் (os) வரவிருக்கும் இந்த ஸ்மார்ட்போன், மூன்று தொடுதிரைகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இது மல்டிடாஸ்க்கிற்கு முற்றிலும், ஏற்ற வகையிnf இருக்கும் என இதனை உருவாக்கி வரும் ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர். இதன் சிறப்பம்சமே இதன் மூன்று தொடுதிரைகள். ஆம், இந்த தொடுதிரைகளைப் பயன்படுத்தி நாம் எளிதாகப் இ-புத்தகங்களைப் படிக்க இயலும். பல சிறப்பம்சங்களுடன் வரவிருக்கும் இந்த ஸ்மார்ட்போன், வியாபாரத்திற்குக் கிட்டத்தட்ட தயாராகிவிட்டது எனக் கூறலாம்.

நோக்கியா 889

இதனை நாம் கையில் அணியும் பேன்ட்டைப் போல் அணிந்து கொள்ளும் வகையில், நெளியும் தன்மையுடன் மொபைல் உலகின் ஜாம்பவானான நோக்கியா தயாரித்துள்ளது. இதுவே உலகின் மிக மெல்லிய ஸ்மார்ட்போன் ஆகும். இதன் தடிமன் வெறும் 5மி.மீ என்றால், யாராலும் நம்ப முடியாது. இதில் அனைத்து வித வசதிகளும், எந்தக் குறையுமின்றி உள்ளதாகவும் பலப் புதிய தொழில்நுட்பங்களும் இதில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், நோக்கியா வெளியுட்டுள்ள அறிக்கையில் நம்மால் காண முடிகிறது.

இந்த வகை ஸ்மார்ட்போன்களை, நாம் எதிர்காலத்தில் பயன்படுத்த உள்ளோம் எனினும், இவை எப்பொழுது வியாபரத்திற்கு வரும் என நம்மால், துல்லியமாகக் கூற முடியாது.

HOT NEWS