2019-2020 நிதியாண்டில் மட்டும், 8,707 வங்கி மோசடிகள் நடைபெற்று இருப்பதாகவும், இதனால், 1.85 லட்சம் கோடி மோசடி செய்யப்பட்டு உள்ளது எனவும், ரிசர்வ் வங்கித் தெரிவித்து உள்ளது.
தற்பொழுது 2019-2020ம் ஆண்டிற்கான இறுதி அறிக்கையினை, இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ளது. அதில், சுமார் 8,707 வங்கி மோசடிகள் நடைபெற்று உள்ளதாக தெரிவித்து உள்ளது. மேலும், இந்த மோசடிகள் மூலம் சுமார் 1.85 லட்சம் கோடி ரூபாயானது மோசடி செய்யப்பட்டு உள்ளது எனவும் கூறியுள்ளது. இது கடந்த 2018-2019ம் ஆண்டினை விட அதிகமாகும்.
கடந்த 2018-2019ம் நிதியாண்டில் 71,540 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றது எனவும், 6,799 வங்கி மோசடிகள் நடைபெற்றன எனவும் கூறப்பட்டு உள்ளது. மொத்தமாக, 159% வங்கி மோசடிகள் அதிகரித்து உள்ளன எனவும், 28% இதன் மதிப்பும் உயர்ந்துள்ளது எனவும் கணக்கிடப்பட்டு உள்ளது.
இதில் பொதுத்துறை வங்கிகளில் 4,413 மோசடிகள் நடைபெற்றுள்ளன. அதன் மொத்த மதிப்பு மட்டும், 1,48,400 கோடி என்றும் கூறியுள்ளது. பெரும்பாலான மோசடிகள் அனைத்தும், வங்கிக் கடன் என்றப் பெயரில் தான் நடைபெறுகின்றன என்றுக் கூறியுள்ளது.