ஜி-20 அவசர ஆலோசனை! 5 லட்சம் கோடி டாலர் நிதி ஒதுக்கீடு!

27 March 2020 அரசியல்
g20meet1.jpg

ஜி-20 அமைப்பில் பங்கு வகிக்கும் நாடுகளின் தலைவர்கள், நேற்று அவரசர ஆலோசனையில் ஈடுபட்டனர்.

சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில், ஜி-29 அவசரக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஜி-20 நாடுகளின் தலைவர்கள் பங்குபெற்றனர். இதில், அனைத்து மக்களுக்கும் தேவையான அத்தியாவசிய மருத்துவ உதவி கண்டிப்பாக கிடைத்தேத் தீர வேண்டும் என பேசப்பட்டது.

வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம், இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாரதப் பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர். அப்பொழுது பேசிய பிரதமர் மோடி, இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த கொரோனா வைரஸ் பரவும் என்பது தெரியாது எனவும், இதற்குத் தற்பொழுது வரை மருந்து கண்டுபிடிக்காதது வருத்தம் அளிக்கும் விஷயம் எனவும் கூறியுள்ளார்.

இந்த வைரஸால், ஜி-20 நாடுகளே அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவும், எனவே இந்த நோயினைக் கண்டுபிடிக்கும் கருவிகளையும் குணப்படுத்தும் முயற்சியினையும் அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில், ஐநா தலைவர், ஐஎம்எப் மற்றும் உலக சுகாதார அமைப்பின் தலைவர்களும் பங்குபெற்றனர்.

அனைவரும் தங்களுடையக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்த நோயினைக் கட்டுப்படுத்த மொத்தமாக 5 லட்சம் கோடி அமெரிக்க டாலர்களைத் திரட்டியுள்ளனர். இந்தியாவின் சார்பில், சுமார் ஒரு கோடி டாலர்கள் வழங்கப்படும் என, இந்தியப் பிரதமர் பேசினார்.

HOT NEWS