ககன்யாண் திட்டம் ஒரு வருடத்திற்கு ஒத்தி வைப்பு! சிவன் அறிவித்தார்!

11 June 2020 அரசியல்
sivan.jpg

ஆளில்லா விண்கலத்தினை விண்வெளிக்கு அனுப்பும், இஸ்ரோவின் ககன்யாண் திட்டமானது அடுத்த ஒரு ஆண்டிற்குத் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு சுதந்திர தின விழாவின் பொழுது, இந்தியாவின் 75வது சுதந்திர தின ஆண்டின் பொழுது, 2022ம் ஆண்டு இந்தியாவின் விண்வெளி வீரர்கள் அனுப்பி வைக்கப்படுவர் என, பிரதமர் மோடி கூறினார். அதனைத் தொடர்ந்து, அதற்கான ஆயத்தப் பணிகளை, இஸ்ரோ ஆரம்பித்தது. இதற்கு, ககன்யாண் எனவும் பெயர் வைத்தது.

இதற்கான வீரர்களை இந்தியா விமானப் படையில் இடையில் இருந்து தேர்ந்தெடுத்தனர். அவர்கள் தற்பொழுது ரஷ்யாவில் பயிற்சி பெற்று வருகின்றனர். விண்வெளிக்கு வீரர்களை அனுப்புவதற்கு முன்னர், ஆளில்லாத விண்கலத்தினை விண்ணிற்கு அனுப்பி சோதனை செய்ய, இஸ்ரோ முடிவு செய்தது. இதற்காகப் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட ரோபோவும் உருவாக்கப்பட்டது.

இந்த விண்கலத்தினை உருவாக்கி வருகின்ற இந்தக் காலக்கட்டத்தில், கொரோனாவைரஸ் பரவி வருவதால், தற்பொழுது அந்தப் பணியானது பாதிக்கப்பட்டு உள்ளது. இது குறித்துப் பேசிய இஸ்ரோ அமைப்பின் தலைவர் சிவன், ககன்யாண் திட்டத்திற்காக ஆளில்லாத விண்கலத்தினை விண்ணிற்கு அனுப்பும் திட்டமானது, கொரோனாவைரஸ் காரணமாக அடுத்த ஒரு ஆண்டிற்குத் தள்ளி வைக்கப்படுவதாக, அறிவித்தார். மேலும், சந்திராயண் 3 திட்டமும், ஆறு மாதத்திற்கு தள்ளி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

HOT NEWS