கல்வான் பள்ளத்தாக்கு எங்களுக்கு சொந்தம்! வேலையை காட்டும் சீனா! அனைத்து கட்சிக்கு கூட்டத்துக்கு மோடி அழைப்பு!

17 June 2020 அரசியல்
zhaolijian.jpg

கல்வான் பள்ளத்தாக்கு எங்களுக்கு சொந்தம் எனவும், அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் எனவும் சீன வெளியுறவுத்துறை அதிகாரி அதிரடியாகப் பேசியுள்ளார்.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக, லடாக் எல்லைப் பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகின்றது. இவைகளுக்கு எல்லாம் மேலாக, கடந்த திங்கட்கிழமை அன்று நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். அதே சமயம் சீனாவின் தரப்பில் இருந்து 43 பேர் பலியானதாகவும், பலர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து, இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவுத்துறை தலைமை அதிகாரி ஜாவோ லிஜியான், கல்வான் பள்ளத்தாக்கு சீனாவிற்கே சொந்தமானது எனவும், இந்தியாவின் இராணுவம் தொடர்ந்து மாற்றி மாற்றிப் பேசி வருகின்றது எனவும், எல்லைப் பகுதியில் அத்துமீறல்களை செய்கின்றது எனவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அவர் பேசுகையில், இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு, சீனா எப்பொழுதும் தயாராக இருப்பதாகவும் இந்தியா அதற்கு முன்வர வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இந்த சூழ்நிலையில், இன்று இராணுவ தலைமை தளபதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி, வருகின்ற ஜூன் 19ம் தேதி அன்று மாலை ஆறு மணிக்கு, இந்தியாவின் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டமானது, ஆன்லைனில் நடைபெறும் என கூறப்பட்டு உள்ளது. இதற்கிடையே, இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியாவின் முப்படைகளையும் தயார் நிலையில் இருக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

HOT NEWS