என்னடா! கேம் ஆஃப் த்ரோன்ஸ் முடிஞ்சிருச்சே! என்னப் பாக்குறதுன்னே தெரியலையேன்னு, ஒரு கூட்டம் சுற்றிக் கொண்டு தான் இருக்கின்றது. அப்படி கவலைப்படும் கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரசிகர்களுக்கு, இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது அதனைத் தயாரித்த ஹெச்பிஓ நிறுவனம்.
ஆம், நாம் ஏற்கனவே கேம் ஆஃப் த்ரோன்ஸ் நாடகத்தின், அடுத்த பாகமான, அதன் ப்ரீக்குவல் உருவாக்கப்பட உள்ளது எனக் கூறியிருந்தோம். தற்பொழுது, அதன் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது ஹெச்பிஓ நிறுவனம். மேலும், இது தனியாக கேம் ஆஃப் த்ரோன்ஸ் என்ற சேனலில் வெளியாகி உள்ளதால், இதனை ஹெச்பிஓ வெளியிடுமா எனும் கேள்வியும் எழுந்துள்ளது.
இதனைத் தயாரிக்கும் ஜார்ஜ், இந்த ப்ரீக்குவலின் முதல் பாகத்தை வரும் 2020ம் ஆண்டின், பிற்பகுதியில் வெளியிடத் திட்டமிட்டுள்ளார். அந்த ட்ரெய்லரை நீங்களே கொஞ்சம் பாருங்களேன்!