உலக அளவில், பல நாடுகளிலும் ஹிட் லிஸ்ட்டில் நம்பர் டிவி தொடராக உள்ளது நிகழ்ச்சி கேம் ஆப் த்ரோன்ஸ். 8 பாகங்களாக வெளியான இந்த நிகழ்ச்சியானது, இந்த ஆண்டு நிறைவடந்தது. இந்நிலையில், ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
தற்பொழுது, ஒரு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. இந்த நாடகத்தை உருவாக்கிய ஜார்ஜ் ஆர்ஆர் மார்ட்டின் தெரிவித்துள்ளார். இது குறித்து, தனியார் நிறுவனத்திற்கு அவர் அளித்தப் பேட்டியில், மிக விரைவில் கேம்ஆப் த்ரோன்ஸ் உருவானதற்கு 1000 ஆண்டுகளுக்கு எப்படி இருந்து இருக்கும் என, புதிய சீரியலை உருவாக்க உள்ளதாகவும், அதிலும், வொய்ட் வாக்கர்ஸ் எனப்படும் அமானுஷ்ய மனிதர்கள், ஸ்டார்க் குடும்பத்தினர் இருப்பார்கள் என்றும், அவர்களை வைத்து, இதனை உருவாக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இது கேம்ஆப் த்ரோன்ஸின் முந்தையக் கதையாக இருக்கும் எனவும் கூறியுள்ளார். இருப்பினும், இதன் பெயரை அவர் குறிப்பிடவில்லை. சென்ற ஆண்டு, இதற்கு தி லாங் நைட் எனப் பெயர் வைத்து இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறு இருப்பினும், இன்னும் இதனை தயாரித்து வெளியிடும் ஹெச்பிஓ நிறுவனம், இதுப் பற்றி அதிகாரப்பூர்வமாக எவ்விதத் தகவலையும் வெளியிடவில்லை.