யாருக்கெல்லாம் திரில்லர் படம் புடிக்கும்? அவங்க எல்லாருமே இந்தப் படத்தைப் பார்க்கலாம். இந்தப் படத்தின் வெற்றிக்குப் பின், இது மாதிரியான கதை அம்சம் கொண்ட படங்கள் வருவதற்கு, அதிக வாய்ப்புகள் உள்ளன.
ஒரு வருடத்திற்கு முன் வண்புணர்வுக்கு ஆளான ஒரு பெண், தற்பொழுது கேம் டிசைனிங் செய்கின்றார். அப்படி அவர் செய்யும் அந்தப் பெண்ணிற்கு இருட்டு என்றால் பயம். கேமில் ஒரு வெறி. அந்தக் கேமால் ஏற்படும் பிரச்சனை என்ன? இது பேய் படமா அல்லது சைக்கோ திரில்லரா என நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்! அந்த அளவிற்கு படம் இரத்தத்தை சூடாக்கும் அளவுக்கு படு திரில்லராக எடுத்துள்ளனர்.
வெறும் ஒரு வீடு. அதில் கால் உடைந்த பெண். துணைக்கு வேலைக்காரி. அவ்வளவு தான். இவையேப் படம் முழுக்க வரும். ஆனால், டாப்ஸியின் நடிப்பு இருக்கிறதே, அது உங்களை இருக்கையின் நுனியிலேயே அமர வைத்து இருக்கும். அந்த அளவிற்கு முழு அர்பணிப்பு உணர்வுடன் நடித்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.
கையில் ஒரு டாட்டூ குத்தியிருப்பார். அது ஒரு வருடத்திற்கு முன் சைக்கோ கொலைகாரன் குத்தியிருப்பான். அது இறந்த பெண் ஒருவரின் இரத்தத்தினைப் பயன்படுத்தி குத்தியிருப்பான். அப்பொழுது, டாப்ஸியின் முகம் ஒரு வித நடிப்பை வெளிப்படுத்தும். சும்மா சொல்லக் கூடாது. கண்டிப்பாக, இப்படத்தில் நடித்ததற்காகவே, விருதுகள் கிடைத்தால் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அந்த அளவிற்கு உயிரைக் கொடுத்து நடித்துள்ளார்.
படத்திற்காக என்ன கதையை எழுதியிருந்தாரோ, அதை அப்படியே படமாக எடுத்து வெற்றிப் பெற்று இருக்கிறார் இயக்குநர் அஸ்வின் சரவணன். நயன்தாரா நடித்த மாயா படத்தின் இயக்குநர் இவரே. இப்பொழுது நீங்கள் எளிதாக புரிந்து கொள்ளலாம். படத்தினை இவர் எப்படி எடுத்திருப்பார் என்று. படத்தில் பாடல்கள் இல்லாவிட்டாலும், திகிலை ஏற்படுத்துவதற்கு எவ்வாறு இசையைப் பயன்படுத்த வேண்டுமோ, அந்த அளவிற்குப் பயன்படுத்தி இருகிறார்கள் இசையமைப்பாளர்கள் ரான் ஈதன் மற்றும் யோஹான். ஒளிப்பதிவும் அருமை.
இந்தப் படத்தை ஒரு வரியில் விமர்சித்தால், கேம் திரில்லரின் புதிய வடிவம் என்று கூறலாம்.