காந்தி விபத்தில் இறந்தார்! ஒடிசா மாநிலப் பாடப் புத்தகங்களில் புதிய சர்ச்சை!

16 November 2019 அரசியல்
mahatmagandhi.jpg

தேசப் பிதா மகாத்மா காந்தியடிகளுக்கு, இப்படியொரு சோதனை வந்திருக்கக் கூடாது. அவர் ஆர்எஸ்எஸ் அமைப்பினைச் சேர்ந்த, கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார் என நம் அனைவருக்குமே தெரியும். ஏன், இந்த உலகிற்கேத் தெரியும். அப்படியொரு விஷயத்தை அசால்ட்டாக மாற்றியிருக்கின்றது ஒடிசா பள்ளிக் கல்வித்துறை.

ஒடிசாவில் உள்ள, அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து வரும் லட்சக்கணக்கான மாணவ மற்றும் மாணவிகளுக்கு, அரசாங்கம் சார்பில் கைப்பிரதியானது அச்சடித்து வழங்கப்பட்டு வருகின்றது. அதில், 1948ம் ஆண்டு, ஜனவரி மாதம் 30ம் தேதி அன்று, டெல்லி பிர்லா பகுதியில் நடைபெற்ற, அடுத்தடுத்த விபத்துக்களால், மகாத்மா காந்தி மரணமடைந்தார் என அச்சிடப்பட்டுள்ளது.

இது தற்பொழுது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் திரும்பப் பெறும் முயற்சியில் ஒடிசா மாநில கல்வித்துறை ஈடுபட்டுள்ளது. மேலும், அதன் அறிக்கையில், இந்தக் கைப்பிரதியினைத் தயாரித்தவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

HOT NEWS