ககன்யான் திட்டத்தின் வீரர்களுக்கு ரஷியாவில் ஆரம்பமானது பயிற்சி!

25 May 2020 தொழில்நுட்பம்
astronaut.jpg

இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆவதை ஒட்டி, வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தினைப் பாரதப் பிரதமர் மோடி அறிவித்தார்.

இதற்கு ககன்யான் எனப் பெயர் வைக்கப்பட்டது. இந்த திட்டத்திற்காக, 10,000 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி, வருகின்ற 2022ம் ஆண்டு இந்தியாவினைச் சேர்ந்த வீரர்கள் விண்வெளிக்குச் செல்ல உள்ளனர். இதற்கான வீரர்களை தேர்வு செய்யும் பணியானது, ஏற்கனவே நடைபெற்றது.

இந்திய விமானப் படையினைச் சேர்ந்த, நான்கு விண்வெளி வீரர்கள் இந்தத் திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டனர். பின்னர், அவர்கள் தற்பொழுது ரஷியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு, எவ்வாறு விண்வெளியில் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்டப் பல பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்ததன் காரணமாக, பயிற்சியானது நிறுத்தப்பட்டது. தற்பொழுது அந்தப் பயிற்சியானது, மீண்டும் தொடங்கப்பட்டது. இதனை ரஷியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான, ரஸ்காஸ்மாஸ் அறிவித்துள்ளது. அத்துடன், அந்த வீரர்களின் புகைப்படத்தினையும் வெளியிட்டு உள்ளது.

ரஷியாவில் உள்ள ஜிசிடிசி பயிற்சி மையத்தில் நான்கு வீரர்களும், தற்பொழுது தீவிரமாகப் பயிற்சி பெற்று வருவதாகவும், அவர்கள் நால்வரும் மிகவும் ஆரோக்கியமாக உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது.

HOT NEWS