தூய்மையானது கங்கை! தன்னைத் தானே சுத்தம் செய்து கொள்ளும் ஒரே நதி!

22 April 2020 அரசியல்
gangesindia.jpg

யாராலும் செய்ய முடியாத செயலை, கொரோனா வைரஸானது செய்துள்ளது.

ஆம், கடந்த நாற்பது ஆண்டுகளாக இந்திய அரசாங்கம் பல கோடி ரூபாயினை செய்து, கங்கை நதியினை சுத்தம் செய்ய முயற்சித்து வந்தது. காங்கிரஸ், பாஜக என இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி அமைத்தாலும், கங்கை மட்டும் சுத்தமாகவில்லை. தொடர்ந்து, மனிதர்கள் அதனைப் பயன்படுத்திக் கொண்டே வந்ததால், அதன் தூய்மைத் தன்மையானது கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அதனை சுத்தப்படுத்தியே ஆக வேண்டும் என, இந்து அமைப்புக்கள் கோரிக்கை விடுத்தன. இதனைத் தொடர்ந்து, மோடி தலைமையிலான மத்திய அரசு பல ஆயிரம் கோடியினை, கங்கையினை சுத்தம் செய்ய ஒதுக்கியது. இருப்பினும், எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்நிலையில், தற்பொழுது ஊரடங்கு உத்தரவானது கடுமையாகக் கடைபிடிக்கப்படுகின்றது. இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. பொதுபோக்குவரத்தும், நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால், வெளியில் பொதுமக்கள் நடமாடமல் வீட்டிலேயே இருக்கின்றனர். இதன் காரணமாக, காசியில் ஓடுகின்ற கங்கை நதியானது, கொஞ்சம் கொஞ்சமாக சுத்தமாகி வருகின்றது.

தற்பொழுது, அதன் தரமானது குடிக்கும் அளவிற்கு சுத்தமாக மாறியுள்ளதாகவும், அது தூய்மையாக உள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மற்ற நதிகளை காட்டிலும், கங்கைக்கு தனி சிறப்பு உண்டு. தன்னுள் விழுகின்ற அனைத்தும் சுத்தம் செய்து கொள்ளக் கூடிய ஆண்டி ஆக்சிஜென்ட் அதிகமாக உள்ள ஒரே நதி கங்கை ஆகும். அதில் உள்ள இந்த வேதிப் பொருளின் காரணமாக, இயற்கையாகவே தன்னை தானே சுத்தம் செய்துள்ளது.

HOT NEWS