சமையல் எரிவாயு விலையும் உயர்வு! மானியமும் உயர்வு!

14 February 2020 அரசியல்
gascylinder.jpg

சமையல் எரிவாயுவின் விலை, தற்பொழுது அதிரடி உயர்வினை சந்தித்துள்ளது. இதனால், இந்தியாவின் பல பகுதிகளில் கடும் எதிர்ப்புகள் கிளம்பி இருக்கின்றன.

இந்த விலை உயர்வின் காரணமாக, சமையல் எரிவாயு வாங்கும் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவர் எனக் கூறப்பட்டது. இதனிடையே, சமையல் எரிவாயுவிற்கு வழங்கும் மானியத்தின் அளவினை, மத்திய அரசு அதிகரித்துள்ளது.

தற்பொழுது 147 ரூபாய் அளவிற்கு, சமையல் எரிவாயுவின் விலை உயர்ந்துள்ளது. இதனால், சென்னையில் ஒரு சிலிண்டரின் விலை 881 ரூபாய்க்கு விற்க்கப்பட்டு வருகின்றது. இதற்கு வழங்கப்படும் மானியத்தின் அளவினை, தற்பொழுது உயர்த்துவதாக, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்லி மற்றும் பிற மாநிலங்களில் வழங்கப்படும் மானியத்தினை, கணக்கில் வைத்துப் பார்க்கும் பொழுது, 135 முதல் 140 ரூபாய் வரை தமிழக மக்களுக்குக் கூடுதலாக, மானியம் கிடைக்க அதிக வாய்ப்பு இருக்கின்றது. டெல்லி உட்பட பிற மாநிலங்களில் 138 ரூபாய் அதிகமாக மானியம் வழங்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS