சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகரிப்பு! என்ன ஆகும் எதிர்காலம்?

05 December 2020 அரசியல்
gascylinder.jpg

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையானது, தற்பொழுது அதிரடியாக 50 ரூபாய் அதிகரித்து உள்ளது.

கடந்த மார்ச் மாதம் உலகளவில் கச்சா எண்ணெயின் விலையானது, கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பேரல் ஒன்றின் விலை வெறும் 35 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அப்பொழுது சமையல் எரிவாயு விலையும் சற்றுக் குறைந்தது. இதனால் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் திருப்தி அடைந்தனர். இந்த சூழலில், கச்சா எண்ணெய் விலையானது, மீண்டும் உயர ஆரம்பித்தது. இருப்பினும், சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.

இந்த சூழலில், தற்பொழுது உலகளவில் கச்சா எண்ணெய் விலையானது ஏறுமுகத்தில் உள்ளது. அதே போல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பானது அதிரடியாகக் குறைந்தும் வருகின்றது. இதனால், சமையல் எரிவாயுவின் விலையானது, கடுமையாக அதிகரித்து உள்ளது. ஒரு சிலிண்டரின் விலையானது 50 ரூபாய் அதிகரித்து உள்ளது.

அதன்படி தற்பொழுது, 610 ரூயாக்கு விற்கப்பட்டு வந்த சிலிண்டரானது இனி 660 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. அதே போல், 19 கிலோ எடை கொண்ட, வர்த்தக சமையல் சிலிண்டரானது 56.50 ரூபாய் உயர்ந்து 1410 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது. இந்த விலையேற்றத்தால், அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சிலிண்டரின் விலையானது தொடர்ந்து உயர்ந்தால், ஏழை எளிய மக்களின் வாழ்வு என்ன ஆகும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

HOT NEWS