மானியம் இல்லாத கியாஸ் சிலிண்டர் விலை குறைந்தது!

02 March 2020 அரசியல்
gascylinder.jpg

இந்தியாவில் வழங்கப்பட்டு வரும், மானியம் இல்லாத சிலிண்டர் விலையானது, 55 ரூபாய் குறைந்துள்ளது.

ஆண்டுக்கு 12 மானிய சிலிண்டர்கள் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் வழங்கப்படும் என, மத்திய அரசு அறிவித்தது முதல், ஒவ்வொரு குடும்பங்களுக்கும் அவ்வாறு வழங்கப்பட்டும் வருகின்றது. இந்நிலையில், மானியப் பணத்தினை அந்தந்த குடும்பங்களுக்கான வங்கிக் கணக்குகளில் மத்திய அரசு நேரடியாக செலுத்துகின்றது.

இதனிடையே, மானியம் இல்லாத சிலிண்டரின் விலையானது, அதிரடியாக அதிகரித்தது. இதனால், பொதுமக்கள் மட்டுமின்றி, வர்த்தகம் செய்பவர்கள், ஹோட்டல் உள்ளிட்டத் தொழில்களில் ஈடுபடுவோர் அதிகளவில் பாதிப்படைந்தனர். இதனால், கியஸ் சிலிண்டர் தொடர்புடையத் தொழில்கள் கடும் பாதிப்படைந்தன.

இதனைக் கருத்தில் கொண்டு கிட்டத்தட்ட 55 ரூபாய் அளவிற்கு, கியஸ் சிலிண்டர் விலையானது குறைந்துள்ளது. மும்பையில் 829.50 ரூபாயாக இருந்த சிலிண்டர் விலையானது, 53.50 ரூபாய் குறைந்து 776 ரூபாய்க்கும், சென்னையில் 881 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்து கியாஸ் சிலிண்டரானது, 55 ரூபாய் அளவிற்கு குறைந்து 826 ரூபாய்க்கு விற்கப்பட உள்ளது.

இதனால், பொதுமக்கள் மட்டுமின்றி, தொழில் செய்பவர்களும் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகின்றது. சர்வதேச அளவில் ஏற்படும் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் அதன் விலையில் ஏற்படும் மாற்றங்களின் காரணமாக, இந்த கியாஸ் சிலிண்டர் விலையானது, ஏற்றம் மற்றும் இறக்கத்தினை சந்திக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS