இந்தியாவின் ஜிடிபி 4.7 ஆக குறைவு! எதிர்காலம் கேள்விக்குறி!

01 March 2020 அரசியல்
gdp.jpg

டிசம்பர் 2019ம் ஆண்டு கணக்கின் படி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதமானது 4.7% ஆக குறைந்துள்ளது. இந்த அதிகாரப்பூர்வத் தகவலை, தேசிய புள்ளியியல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இந்த வளர்ச்சி விகிதமானது, மேலும் குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்க்கப்படுகின்றது. கடந்த ஜூன் 2018ம் ஆண்டு முதல், இந்திய நாட்டின் ஜிடிபியானது, குறைந்த வண்ணமே உள்ளது. ஆட்டோமொபைல் துறையில், இந்த பிரச்சனையானது வெளிப்படையாகவே தெரிந்தது. புதிதாக, வாகனங்கள் விற்பனைக்கு வருவது குறைந்துள்ளது. பெரிய அளவில், மோட்டார் வாகனத் துறையில் விற்பனைகள் இல்லை என, மோட்டார் வாகன நிறுவனங்களின் தலைவர்கள் கூறினர்.

பிஸ்கட், டெலிகாம், விவசாயம் என அனைத்து முன்னணி துறைகளிலும் படுவீழ்ச்சியினை சந்தித்துள்ளன. இந்தியாவில் பல கோடி பேர் வேலையில்லாமல், கஷ்டப்படுகின்றனர். பலர், திருட்டுத் தொழிலில் ஈடுபடுகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், தொடர்ந்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் விகதம் குறைந்து கொண்டே உள்ளது.

2018-2019 ஜிடிபியின் அளவானது, 6.8 முதல் 6.1% என்ற அளவில் இருந்தது! பின்னர், செப்டம்பர் மாத கணக்கின் படி, 4.5 முதல் 5.1% ஆக இருந்தது. இந்நிலையில் டிசம்பர் மாத கடைசி நிலவரப்படி, 4.7% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. 3.0% கீழ் சென்றால், இந்தியாவின் உற்பத்தியானது, கிட்டத்தட்ட காலியாகி உள்ளது என அர்த்தமாகவேப் பார்க்கப்படுகின்றது.

இதற்கு சாத்தியமானக் கூறுகள் உள்ளதாகவும், இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவும், பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அது மட்டுமின்றி, சர்வதேச நிதிநிர்ணயமும் இந்திய பொருளாதாரம் குறித்து கவலைத் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS